பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 25 கொள்ளுகின்றனர். அது போலவே ஒரு கூட்டம் வருகின்றது. இங்கிருந்த மூவரும் அக்கூட்டத்தில் பாய்கின்றனர். கூட்டத்தின் தலைவன் மாள்கின்றான்.மற்றும் பலருக்கும் அதே கதிதான். ஆனால் திம்மனும் உயிர் துறக்கின்றான். சுப்பம்மா பிடிபடுகின்றாள். சுப்பம்மா தேசிங்கின் அவை நடுவில் நிறுத்தப்படுகின்றாள். சுவையான சொற்போர் நடைபெறுகின்றது - தேசிங்குக்கும் சுப்பம்மாவுக்கும். பின்னர் தேசிங்கு தீர்ப்பைச் சொல்லுகின்றான்; "எல்லோரும் பார்க்க இவளைப் பொது நிலத்தில் நிறுத்தி இவளுள்ளம் துடிக்குமாறு ஒரு கையை வெட்டுக; மறுநாட் காலை ஒரு மார்பை வெட்டுக; மூன்றாம் நாளில் முதுகினில் சதையைக் கிழித்திடுக; பின்னர் மூக்கறுக்க காதுகள் பின்பு ஒரு கை பின்பு இடையிடையே கொதி நீரை அவள் மேனியில் தெளித்திடுக; இடைநேரத்தில் குதிகாலைக் கொளுத்துக விட்டுவிட்டு வதை புரிக' என்பது தீர்ப்பு. இதனைக் கேட்டாள் தமிழ் மறத்தி. அவள் குரல் வளையின் கீழ் நோக்கி மூச்சை இறுக்குகின்றாள். நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்கின்றாள். நெடுவாழ்வின் பெரும்புகழை சாவில் நடுகின்றாள். அவையினர் அச்சத்தையும் வியப்பையும் தழுவுகின்றனர். பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை காண்கின்றனர் பொதுமக்கள். தேசிங்கிற்கும் பேச்சில்லை.இரக்கம் அவனை ஆட்கொள்ளுகின்றது. அன்பை நோக்கி "ஆச்சியே எனக்கருள்வாய்! என்று கேட்கின்றான்."அறமே வா’ என்று அழைக்கின்றது அவள் குரல்' அவன் ஆவியும் பிரிகின்றது. 5. குறிஞ்சித் திட்டு கடல் கொண்ட குமரிநாட்டில் கடல் கொள்ளாப் பகுதி குறிஞ்சித் திட்டு. இது எல்லாவித வளங்களும் நலங்களும் கொண்ட ஒரு சிறந்த நாடு; பிறர் நாட்டைப் பிடித்துத் தாமே பிழைக்கும்தீ யார்விழிக்கு மறைவாக நடுக்க டற்கண் மற்றிந்தக் குறிஞ்சி நாட்டை நிறைநாட்கள் வாழும் வண்ணம் நிறுவினாள் இயற்கை அன்னை' 20. குதி. பிரிவு