பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீஇ என்பார் பாவேந்தர். இங்கு மதமில்லை; மதம் பெற்ற சாதி இல்லை; கோயில் இல்லை; மக்கள் நெஞ்சில் கொதிப்பில்லை; பொதுப் பணத்தைக் கொள்ளை கொள்ளும் கயவர்கள் இல்லை. வேற்றுவர் படையெடுப்பு நிகழ்ந்ததில்லை. தமிழ் ஒழுக்கத்தை மாற்றப் பிறர் அங்கே வந்ததில்லை. எல்லாரும் உள்ளவர் ஆதலாலே இரப்பவர் எவரும் இல்லை. இப்படிப்பட்ட நலஞ்செறிந்த நாடு குறிஞ்சித் திட்டு, இதனை நயனுற ஆண்ட மன்னர் நாலாயிரத்தவர். ஒரு சமயம் குறைவில்லா குறிஞ்சி நாட்டிற்கு குலத்தைக் கெடுக்கும் கோடறிக் காம்பாய், முத்தமிழ் நெறிபிழைப்பானாய், ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்றான் திரையமன்னன் என்பான். வழக்கத்திற்கு மாறாக, திரையன் அயல்நாடு சென்று திரும்புகின்றான். அவன் வரும் கப்பலை எதிர்நோக்கி அமைச்சன் அறிவழகன், படைத்தலைவன் சேந்தன் உட்படப் பலர் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.இச்சமயம் படைத்தலைவன் சேந்தனும், அமைச்சன் அறிவழகனும் மழையின்மையாலும், தொழில்கள் நடைபெறாமையாலும், விலைவாசி ஏற்றத்தாலும் சீர்கேடடைந்த நாட்டின் நிலைமையைப்பற்றி எடுத்துரைக்கின்றனர். மன்னி மல்லிகையும் நாடோறும் கடற்கரைக்கு வந்து நொந்து நொந்து நோயுற்றதனால் அன்று வரவும் இயலாத நிலையை எய்துகின்றார். இவ்வமயம் தாழப் பறந்த புறாக்களில் ஒன்றன் காலில் கட்டியிருந்த அஞ்சலில் "அன்பரீர் குறிஞ்சித் திட்டை அடைந்ததென் கப்பல்” என்ற செய்தி இருந்தது. அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றனர். சென்னையிலிருந்து வந்த கப்பலில் அரசனுடன் அரசனின் காதலி விநோதை (ஆனுருவத்துடன், சிவானந்தர், சிவசம்பந்தர்’ திருமாலடியார், மடத்தலைவர், அம்புயம் (பெண்) முதலியோர் வருகின்றனர். அரசனும் அமைச்சனும் நாட்டு நலம் விசாரித்துக் கொள்ளுகின்றனர். மக்கள் யாவரும் வாய்கட்டி மனத்துள் திட்டிப் 21. மன்னி - அரசி; மன்னன் என்பதற்குப் பெண்பால் என்ற பொருளில் ஆளுகின்றார் கவிஞர். 22. சிவானந்தர்,சிவசம்பந்தர்-இவர்கள் சென்னைக் கடற்கரையில் விநோதையை அரசனுக்குத் தொடர்பு படுத்தியவர்கள்.