பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 27 பிரிந்து செல்லுகின்றனர். வழியில் அரண்மனை இருந்தும் அங்கு ஏகாமல் வந்தவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு அரசன் தரும இல்லம் அடைகின்றான். அரசி மல்லிகையின் தோழி தாமரை, வண்டி அரண்மனைக்கு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து திரும்பிச் சென்று அரசியிடம் அரசன் தரும இல்லம் அடைந்ததைச் செப்புகின்றாள். அரசனும் விநோதையும் ஊடலும் கூடலுமாக இன்ப விளையாட்டில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும்பொழுது அரண்மனைப் பணியாள் சில்லிமூக்கன் அங்கு வருகின்றான். அவன் வருகை சிவபூசையில் கரடி புகுந்தமாதிரி ஆய்விடுகின்றது. சில்லி மூலம் அரசனுக்கு ஒரு மனைவியும் மகனும் உண்டு என்பதையும், மகன் தாய்மாமனும் (மன்னியின் அண்ணன்) விளாமாவட்டத்தின் சிற்றரசனுமான திண்ணனது இல்லத்தில் எண்ணிலாக் கலை பயின்று வருவதையும் விநோதை அறிந்து கொள்ளுகின்றாள். மன்னன் செயலைப் பொறுக்காமல் மன்னி தற்கொலை செய்து கொள்ளுகின்றாள்.இச்செய்தி கேட்டு திண்னனும் இளந்திரையனும் (அரசனின் மகன்) புறப்பட்டு வரும்போது விநோதையும் அவளுடைய தோழி அம்புயமும் வெள்ளாடை புனைந்துகொண்டு அவர்களை ஏமாற்றி நஞ்சூட்டிக் கொன்று விடுகின்றனர். அரசனும் விநோதையும் வாழும் தரும இல்லம் கேளிக்கை, ஒழுக்கக்கேடு இவற்றின் கோட்டையாக மாறுகின்றது. சமய நம்பிக்கையையும் தெய்வ நம்பிக்கையையும் மக்களிடம் ஊட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றாள். இதில் எத்தனையோ சூழ்ச்சிகள்; தில்லுமுல்லுகள். இவற்றிற்கு விநோதையுடன் வந்த மடத்தலைவர், சிவானந்தர், திருமாலடியார், சிவசம்பந்தர் ஆகியோர் அவரவர் வழியில் துணைபுரிகின்றனர். அரசில் நிதி நெருக்கடி ஏற்படுகின்றது; ஆட்சிமுறை சீர்கேடடைகின்றது. தரும இல்லத்தில் நடைபெறும் அத்தனை அட்டுழியங்கட்கும் சில்லிமூக்கன் என்ற அரண்மனைப் பணியாள் துணைபோகின்றான். அரசன் சென்னையிலிருந்து கொணர்ந்த விநோதை "வடநாட்டில் பலர் முகர்ந்த மல்லிகைப்பூ வழிப்போக்கர் உமிழ் வட்டில் சென்னை நகரில்” என்று சில்லியின் வாயில் வைத்துப் பேசுகின்றார் கவிஞர். "ஆவதும் பெண்ணாலே; அழிவதும்