பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு பெண்ணாலே” என்பது மக்கள் வாயில் அடிக்கடி பேசப்பெறும் பொன்மொழி. இங்கு விநோதை வரவால் குறிஞ்சித்திட்டு பல்லாற்றானும் சீர்கேடடைகின்றது. செழியன் என்னும் படைத் தலைவன் சேந்தனின் நண்பன். சில்லியின் உதவியால் விநோதையின் வலையில் வீழ்கின்றான்; அவளிடம் இன்பந் துய்க்கின்றான்; திருமணமும் செய்துகொள்ளுகின்றான்; இறுதியில் கடலில் வீழ்ந்து அழிகின்றான். சேந்தனிடம் விநோதை வீசின வலை கிழிந்து போகின்றது; அரசனிடம் அவன்மீது கோள்மூட்டி அவனைத் தானாகத் தீயில் வீழ்ந்து அழியச் செய்கின்றாள் (கொலை தண்டனை). சில்லியின் மகன் தங்கவேலை வலியப் புணர்ந்து தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டு நஞ்சூட்டி அவனைத் தீர்த்துக் கட்டுகின்றாள். மன்னன் விநோதையின் கற்பைப்பற்றி ஐயுறுகின்றான். தம்பிரானை வசப்படுத்த முனைந்து, அவனும் அவளைத் துய்க்க முயன்றபோது, தாமரை என்னும் அரசமாதேவியால் கொலை செய்யப்படுகின்றாள். கடற்கரையிலுள்ள திருக்கோயிலைத் திறந்தபோது அவளது பிணம் காணப்படுகின்றது. அவளை மாய்க்க நினைத்தான் மன்னன். ஆனால் அவள் வேறு விதமாக மாய்கின்றாள். இப்போது அமைச்சன் அறிவழகன் அரசனிடம் இதுகாறும் இழைத்த தவறுகளைப் பிட்டுப்பிட்டு வைக்கின்றான். அரசன் திரையன் தன் தவறுகளை உணர்ந்ததும் உயிர் தானாகப் பிரிந்து போகின்றது. புன்றொழில் சிவ சம்பந்தன் முதலியோர் சிறைக்கு அனுப்பப் பெறுகின்றனர். மக்கள் தலைவர்களில் ஒருவன் முடியாட்சியின் முறைகேடுகளை எடுத்துக் கூற, மக்கள் குடியாட்சிக்கு வழி வகுக்கின்றனர். இந்த ஆட்சியில் அல்லன அழித்தல், செல்வம் நாட்டிற்குச் சேர்த்தல், செந்தமிழ் காத்தல் மதம், சாதிமுறை நீங்கின அரசு அமைத்தல் போன்ற குறிக்கோளுடன் குடியாட்சி அரசு அமைகின்றது. இஃது ஒரு "துயரக் காப்பியம்'.