பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் -3 கதைக்கரு கதிர் நாட்டின் மன்னன் கதிரை வேலன்; அரசமாதேவி கண்ணுக்கினியாள். (பாண்டியன் பரிசு இவளது அண்ணன் நரிக்கண்ணன் அண்டை நாடான வேழ நாட்டின் படைத்தலைவன்; சேனாதிபதி. நரிக்கண்ணன் சூழ்ச்சியால் வேழநாட்டான் கதிர் நாட்டின்மீது தண்டெடுத்து வருகின்றான். கதிர் நாட்டரசனை ஒழித்துக் கட்டி கதிர் நாட்டைத் தான் ஆள வேண்டும் என்பது நரிக் கண்ணனின் திட்டம். இரு நாட்டின் படைகளும் போரிடுகின்றன. கதிர்நாடு வீழ்ச்சியடைகின்றது. கதிரை வேலனும் வேழநாட்டரசனும் அரண்மனைக்குள் தனிப்போர் புரிகின்றனர். வஞ்சக நரிக்கண்ணன் முக மூடியும் கறுப்புடையும் அணிந்து கதிரை வேல் மன்னனைப் பின்னிருந்து ஈட்டி எய்து கொன்று விடுகின்றான். பின்னர் அண்ணன் நரிக்கண்ணனைக் கொல்வதாகச் சூளுரைத்துப் போர்க்கோலம் பூண்டுவந்த அரசமாதேவியும் நரிக்கண்ணனின் வாளுக்கு இரையாகின்றாள். வீரப்பன் கள்வர் தலைவன். இவன் மனைவி ஆத்தாள் கணவனின் தீச்செயலைப் பொறுக்காமல் அவனைக் கைவிட்டுத்தன் மகன் வேலனுடன் தனிக்குடிசையில் வாழ்ந்து வருகின்றாள். சீனி என்னும் கணக்காயனிடம் வேலன் கல்வி கற்று வருகின்றான். சீனியின் பரிந்துரையால் ஆத்தாள் அரண்மனையில் பணிப்பெண் வேலையிலமர்ந்து கதிர்நாட்டரசனின் மகள் அன்னத்தின் வளர்ப்புத் தாயாகின்றாள். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஆத்தாள் அன்னத்தை நிலவறை வழியாகக் கடத்திச் சென்று அவளைக் காக்கின்றாள். அன்னத்தைக் கொல்வதற்காக நரிக்கண்ணன் அலைந்து திரிகின்றான். அரண்மனைக்குள் கதிர்நாட்டு உரிமைப் பட்டயம் அடங்கிய பாண்டியன் பரிசு என்னும் பொற்பேழை" நரிக்கண்ணனின் கைக்குக் கிட்டுகின்றது. அதை அவன் தன்