பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சுரானின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு ஆளிடம் தந்து தன் தேர்ப்பாகனிடம் சேர்க்குமாறு பணிக்கின்றான். மறவர்களில் ஒருவனாக மாறுவேடம் பூண்டிருந்த வீரப்பன் கைக்கு ஆள்மாறாட்டத்தால் கிடைக்கவே அதனை அவன் எங்கோ மறைத்து விடுகின்றான். அன்னத்தையும் ஆத்தாளையும் கொன்றொழிக்க நரிக் கண்ணனின் ஆட்கள் அன்னமும் ஆத்தாளும் தங்கியிருக்கும் புல்லூர்க் குடிசையைச் சூழ்கின்றனர். கணக்காயனால் ஏவப்பெற்ற வேலனும் அவனுக்குத் துணையாக வந்த வீரர்களும் நரிக்கண்ணனின் ஆட்கள்மீது பாய்கின்றனர்; அவர்களைக் குலை நடுங்க வைக்கின்றனர். ஆத்தாளும் அன்னமும் தங்கள் உருவை மாற்றிக்கொண்டு குடிசையை விட்டுத் தப்பி வெளியேறுகின்றனர். கணக்காயனின் இல்லத்திற்கு வருகின்றனர். கணக்காயனும் அவர்களும் மாற்றுடை புனைந்துகொண்டு நரிக்கண்ணனின் வஞ்சகச் செயலை வேழநாட்டரசனுக்கு உணர்த்துவதற்காக அரண்மனைக்குத் தென்புறத்தில் தங்கியிருந்த திருமன்றை நோக்கி வருகின்றனர். நரிக்கண்ணன் வேழமன்னனிடம் பல பொய் மூட்டைகளை அவிழ்த்து நீலிக் கண்ணிர் வடித்து நல்லவனைப்போல் நடித்து மன்னனை நம்ப வைக்கின்றான். இந்த நாடு தன் முன்னோருடையது என்பதற்குப் பொய் வரலாற்றைக் கூறி மேலும் அவன் மனத்தைக் குழப்பி அவனை அதில் நம்ப வைக்கின்றான். அரசனும் முரசறைவித்து அவனுக்குக் கதிர்நாட்டின் அரசனாகத் திருமுடியும் சூட்டி விடுகின்றான். இவ்வாறு முடிசூட்டிய அரசன், அமைச்சர், படைத்தலைவர்கள் சூழ அரண்மனையின் பொதுமண்டபத்தில் மகிழ்ந்திருக்கையில் கணக்காயன் முதலியோர் அம்மண்டபத்திற்கு வருகின்றனர். ՅՔ(Աք உண்மையையும் அரசனுக்கு விளக்குகின்றனர். ஆத்தாள் தான் மாறுவேடத்துடனிருந்து நடைபெற்ற அனைத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றாள். தன் மாற்றுருவத்தையும் அன்னத்தின் மாற்றுருவத்தையும் களைந்து அனைத்தையும் தெளிவாக்குகின்றாள். யாவற்றையும் தெளிவாக அறிந்த வேழமன்னன் நடைபெற்ற