பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்கரு 34 கொடுமைகளுக்கு வருந்துகின்றான். இனி அவர்கட்கு ஒரு தீமையுமின்றிக் காப்பதாக உறுதியும் அளிக்கின்றான். அன்னம் பாண்டியன் பரிசின் விவரத்தை அடையாளத்துடன் கூறி அதனைத் தேடித் தருமாறு அரசனை வேண்டுகின்றாள். அரசன் உதவியால் அரண்மனையில் பாண்டியன் பரிசு தேடப்படுகின்றது. ஆத்தாளும் அன்னமும் மாறுவேடத்துடனே தேடுவோரைப் பின்தொடர்கின்றனர். ஆளி என்பான் படைவீரர்களுடன் அரண்மனையெங்கும் தேடி பேழை கிடைக்கவில்லை என்று கைவிரிக்கின்றான். பேழை தேடும் முயற்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பேழை தேடும்போது ஒருவரும் வெளியேறக் கூடாது என்பது அரசனது ஆணை. மாறுவேடத்துடன் தேடுவோரில் ஒருவனாக இருந்த வீரப்பன் அரண்மனையை விட்டு வெளியேற முயலும்போது ஆத்தாள் அவனைத்துரத்திச் சென்று அவனது கணுக்காலை வெட்டுகின்றாள். அவனும் அவளது இடக்கையை வெட்டி வீழ்த்துகின்றான். அருகருகே வீழ்ந்த இருவரும் புலம்பும்பொழுது ஒருவரையொருவர் அறிகின்றனர். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” இருவரும் நகர்ந்து தனியிடம் சென்று உரையாடுகின்றனர். பாண்டியன் பரிசு குழப்பம் தீரும்வரை அது மறைவாகவே இருக்க வேண்டும் என்றும், குழப்பம் தீர்ந்தவுடன் அதன்ை அன்னத்திடம் ஒப்படைக்கலாம் என்றும் கூறுகின்றான் வீரப்பன். தன் கணவன் தன் தீச்செயலைக் கைவிட்டு நற்செயலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மகிழ்கின்றாள் ஆத்தாள். வீரப்பன் தன் மகன் வேலனையும் அன்னத்தையும் காண முடியா நிலைக்கு வருந்துகின்றான். இருவரும் தங்களின் வெட்டுண்ட நிலைக்கு வருந்துகின்றனர். இருவரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச் செல்லுகின்றனர். வேழமன்னன் நரிக்கண்ணனை அழைத்து அவனது அடாத செயல்களைக் கண்டிக்கின்றான். அன்னத்தையும் ஆத்தாளையும் தீர்த்துக்கட்டும் திட்டத்தையும் கடிந்து பாண்டியன் பரிசையும் திருடிவிட்டதாகக் குற்றம் சாற்றுகின்றான். நரிக்கண்ணன் மீண்டும் பல பொய்களைக் கூறி நடித்து தான் ஏதும் அறியாதவன் என்றும்