பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு கன்னத்தை நகம் கீறிடாது என்றும் கூறி தன் மகன் பொன்னப்பனுக்கு அவனது அத்தை மகள் அன்னத்தை மணம் செய்வித்துக் கதிர்நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகின்றான், மன்னன் அன்னத்தின் விருப்பத்தைக் கேட்க, அவள் தனக்குரிய பாண்டியன் பரிசைத் தேடித் தருவோரைத்தான் தான் மனப்பதாக உறுதி மொழிகின்றாள். மேலும் தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் வேண்டுகின்றாள். வேழ நாட்டரசனும் அவளுக்குப் பாதுகாப்பளித்து அன்னத்தின் எண்ணத்தை முரசறைவித்து நாட்டுமக்களுக்கு அறிவிக்கின்றான். ஒருநாள் நிலவெரிக்கும் இரவினில் அன்னம், நீலி என்னும் தன் தோழியிடம் தன் துயரங்களை மொழிகின்றாள். தனக்காக வீரப்பனின் கணுக்காலும், ஆத்தாளின் கையும் வெட்டுண்ட நிலைகளைக் கூறி வருந்துகின்றாள். வேலனைத் தான் நேரில் பார்த்தறியாவிட்டாலும், தான் கேட்ட அவனது தன்னலமற்ற வீரச் செயல்களையும், பொதுநலத்திற்காகப் போரிட்டு நெற்றியில் ஊறுபட்ட செய்தியையும், பாண்டியன் பரிசு கிடைக்காததையும் கூறி வருந்துகின்றாள்.நீலி தான் வீரப்பனைக் கண்டதாகவும் தன் நோயும், ஆத்தாளின் நோயும் திர்ந்த பிறகு அன்னத்திற்கு நல்ல வழி பிறக்கும் என்று கூறியதையும் தெரிவித்து அவளை ஆற்றுவிக்கின்றாள். "பெரியோர் வாக்கு பலிக்கும்” என்று அமைதியுறுகின்றாள் அன்னம். நீலியும் அன்னமும் பேசிக்கொண்டிருக்கும்போது நரிக்கண்ணனின் மகன் பொன்னப்பன் அங்கு வருகின்றான். அன்னத்தின்மீது மோகங்கொண்டு பொருத்தமற்ற காதல் கிறுக்கு மொழிகள் பல பேசி அப்பெண்கள் இருவருக்கும் நகைச்சுவை விருந்தளிக்கின்றான். பேசிக்கொண்டே வெள்ளை விழிகாட்டி உடல் துவண்டு உட்கார்ந்து மெதுவாகப் படுத்துக் குறட்டையும் விடுகின்றான். தமோகுணத்திற்கும் அறிவின்மைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவன் இவன். நீலி அவன்மீது இரக்க முறுகின்றாள். பின்னர் இருவரும் நிலா முற்றத்தை விட்டு நீங்குகின்றனர்.