பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்கரு Y 33 அதே இரவில் நரிக்கண்ணனும் அவனுடைய அமைச்சனும் தனித்து உரையாடுகின்றனர். அன்னத்தைப்பற்றிய எண்ணமே அவன் மனத்தில் திகிலை ஏற்படுத்துகின்றது. "வேழத்தானிடம் பட்டயத்தைக் காட்டி ஆட்சி பெற்று வெள்ளெருக்கை என் வீட்டில் வளர்க்க அன்றோ ஆழத்தில் உழுகின்றாள்” என்று நரிக்கண்ணன் அமைச்சனிடம் சொல்லுகின்றான். பாண்டியன் பரிசைக் கவர்ந்து சென்ற கள்வன், கள்வர்கள் வாழும் தென்மலையில்தான் எங்கேனும் புதைத்து வைத்திருக்க வேண்டும் என்றும், பகைவர்கள் அங்குச் சென்று அதைத் தேடாவண்ணம் பூதச் செய்தியைப் பரப்பிவிட்டு எவரும் அங்கு வராமல் செய்து தன் ஆட்கள் மட்டும் அதைத் தேடும் படியாகச் செய்ய வேண்டும் என்றும் நரிக்கண்ணன் தன் சூழ்ச்சியை உரைக்கின்றான். மறுநாள் அதிகாலையில் நரிக்கண்ணனின் ஆள் "எட்டி’ என்பான்பூதவேடமிட்டு தென்மலைமீதேறிப்பெருங்கூச்சலிடுகின்றான். கண்டாரும் கேட்டாரும் அஞ்சி நிலைகுலைந்து நாலாபக்கமும் ஒடுகின்றனர். பூதச் செய்தி நகரெங்கும் பரவுகின்றது. பாண்டியன் பரிசைத் தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபடவில்லை. நரிக்கண்ணனின் ஆட்கள் அதைத் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். நரிக்கண்ணனின் அமைச்சன் மகனாகிய நீலனும் பேழையைத் தேடத் தொடங்குகின்றான்.அவனுக்கு அன்னத்தின் மீது ஒரு கண் உள்ளது. சீனியும் (கணக்காயன் நரிக்கண்ணனின் வஞ்சத்தை வீழ்த்த தம் ஆட்களை ஏவிக் குறித்த இடங்களில் தேடச் செய்கின்றார். அன்னம் தான் இழந்த பெற்றோரையும் நாட்டு நிலைமையையும் எண்ணித் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றாள். அன்னத்தின் துயரத்தைக் குறைக்கக் கருதிச் செய்யாற்றில் ஒடம் விட்டு நீந்திக் களிக்க தோழி நீலி அன்னத்தை அழைத்துச் செல்லுகின்றாள். அவர்கள் மாலை வானத்தின் இயற்கை எழிலைக் கண்டு களித்த வண்ணம் படகில் சென்றுகொண்டிருக்கின்றனர். மேற்குத் திசையில் எங்கோ திடீரென வானம் இருண்டு மின்னி இடித்துப் பெருமழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கின்றது. படகு வெள்ளத்தில் சிக்கித் தவிக்க, படகிலுள்ள பெண்கள் கூச்சலிடுகின்றனர்.