பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு எதிர்க்கரையில் குடிசையிலிருந்த வேலன் விரைந்து வெள்ளத்தில் நீந்தி ஒடத்தைக் கரையில் சேர்த்து மகளிர் இருவரையும் காப்பாற்றுகின்றான். அகத்திணையில் இது "புனல்தரு புணர்ச்சி"போல் அமைகின்றது. அவர்கள் அன்னமும் நீலியுமாக இருப்பதை அறிந்த ஆத்தாள் அவர்களை மயக்கந் தெளிவித்து உடைமாற்றி வேண்டிய உதவிகளைச் செய்கின்றாள். அன்னத்தையும் வேலனையும் ஒருவருக்கொருவராக அறிமுகம் செய்துவைக்கின்றாள். அன்னம்-வேலன் அன்புப் பேச்சுகள் நடைபெறுகின்றன. தன்னலம்துறந்து பிறர்நலம் பேணும் பெற்றியுடையவனாகத் தன்னைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றான் வேலன். பொது நலத்திற்காக உயிரையும் விடத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றான். அன்னம் பாண்டியன் பரிசின் அடையாளம் கூறி அதனைத் தேடித்தருமாறு வேண்ட அவனும் "பேழையினைக் கொண்டு வந்து தருவேன்; அன்றிப் பேருலகில் உயிர்வாழேன்” என்று தன் மன உறுதியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றான். ஆத்தாளின் இடக்கை இழப்புக்கும் வீரப்பன் கணுக்கால் இழப்புக்கும் வருந்துகின்றாள் அன்னம். நரிக்கண்ணனின் அமைச்சன் மகன் "நீலன்” என்பான் அருஞ்சூழ்ச்சி செய்வதிலே மிகக் கைக்காரன்.பாண்டியன் பரிசு மூலம் அன்னத்தையும் கதிர் நாட்டையும் பெறும் ஆசையால் தூண்டப் பெற்றுத் தானும் பேழையைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபடுகின்றான். அவன் தன் காதலி நீலியிடம் வந்து பல பசப்பு மொழிகளைப் பகர்ந்து தான் அவளைக் காதலிப்பதாகவும், அன்னத்திற்கு நன்மை செய்ய விரும்புவதாகவும் மாயப் பொய் பல பேசி அவற்றை நம்பிய நீலியிடம் சில செய்திகளை அறிந்து மீளுகின்றான். நரிக்கண்ணனின் ஆட்கள் கள்வர்கள் தங்கியிருக்கும் தென்மலை, அதனைச் சூழ்ந்த காடு, மேடு எல்லாம் தோண்டித் தோண்டிப் பேழையைத் தேடுகின்றனர். நரிக்கண்ணனும் இச்செயல்களை மேற்பார்வையிட்டும் பெரியோரை அதட்டிக் கேட்டுக் கொண்டும் பெருமக்களை உளம் வருத்தியும் திரிகின்றான். தோழன் ஒருவன் யோசனைப்படி வீரப்பன் “அஞ்சவைக்கும் பூதத்தை