பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்கரு 35 அஞ்சவைக்க அஞ்சாறு பூதத்தை" அனுப்பி வைக்கின்றான். நரிக்கண்ணனும் அவனது ஆட்களும் பெரும் பூதத்தைக் கண்டு அதனை உண்மைப் பூதம் என நம்பி நாலா பக்கமும் அஞ்சி ஒடுகின்றனர். ஒடும் திசையெல்லாம், கானும் இடங்கள்தோறும் பெரும்பூதங்கள்! அரண்மனைக்குள்ளும் இதே நிலைதான்! மக்கள் அரண்மனையை விட்டும் நகரை விட்டும் கால்கடுக்க ஓடுகின்றனர்! அன்னமும் வேலனும் அரண்மனைக்குள் நுழைந்து பேழையைத் தேடுகின்றனர். கொஞ்சும் காதல் மொழி பேசி மகிழ்கின்றனர். துறவியாரின் உதவியால் பேழை கிட்டும் என்றும் நம்புகின்றனர். துறவியும் வந்து சேர்கின்றார். மற்றவரைப்புறம் போக்கி வேலன் காதில் வாய்மலரை ஒற்றி ஏதோ நற்செய்தியைக் கூறுகின்றார். நீலன் மீண்டும் தன் காதலி நீலியைச் சந்தித்து வஞ்சித்துத் துய்த்துப் பெரும் பூத வரலாற்றை அறிந்து கொள்ளுகின்றான். அஞ்சியோடித் தங்கியிருந்த ஆனையூர் பள்ளிக்குச் சென்று “நரிக்கண்ணனிடம் பெரும்பூதச் செய்தி ஏமாற்றுவித்தை என விளக்குகின்றான். அவன் யோசனைப்படி அன்றிரவு அனைவரும் யூத உருவ வேடமிட்டு அரண்மனைக்கு ஏகுகின்றனர். மீண்டும் திரும்பி வந்து வேலன் - அன்னம் - துறவியார் முதலியோரிடம் நரிக்கண்ணனின் ஆட்கள் பூத வேடமிட்டு வரும் செய்தியை வத்தி வைக்கின்றான். துறவியார் அவன் தந்தையைக் கொல்லாதிருக்கும் பொருட்டு சிலரின் அடையாளம் கேட்க, தன் தந்தை இடக்கையில் வேப்பிலை வைத்திருப்பான் என்றும் நரிக்கண்ணன் தலையில் மாம்பூ இருக்கும் என்றும் அடையாளம் கூறி நடைகட்டுகின்றான். அன்னத்தின் ஆட்கள் துறவியின் யோசனைப்படிச் செயற்படுகின்றனர். அன்னமும் வேலனும் பம்பரம்போல் சுழன்று செயற்படுகின்றனர். "பிறந்தது விடுதலை நாள்! பிறந்ததின்பம்!” என்று வீரர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். கணக்காயரும் அவரிடம் கற்பாரும், வீரப்பனும் அவன் தோழர்களும் வந்து சேர்கின்றனர். நாட்டில் அன்பு சுரக்கும் மறவர் எல்லாம் “பணிக்காக உயிர்” என்று கொதித்து வருகின்றனர். அன்னம் வேழமன்னனைச் சந்தித்து அரண்மனைக்குள் நரிக்கண்ணன் ஆட்கள் பூதமாக வருவதைத்