பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சுரகவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு தெரிவித்துத் தமக்குக் காப்பளிக்குமாறு வேண்டுகின்றாள். மன்னனும் தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து உதவுவதாக உறுதியளிக்கின்றான். இதனைக் கேட்ட துறவியார் மகிழ்வு கொள்ளுகின்றார். வீரர்கள் வேலன் தலைமையில் பூதங்களை எதிர்க்கத் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பிட்ட இரவு பூதங்கள் அரண்மனைக்குள் புகுந்து ஆர்ப்பரிக்கின்றன. அன்னத்தின் வாள், தலையில் மாம்பூ அணிந்திருந்த நரிக்கண்ணன் பூதத்தை வெட்டி வீழ்த்துகின்றது. வேலனும் ஏனையோரும் வேப்பிலை பூதத்தை விட்டு எல்லாப் பூதங்களையும் கொன்று குவிக்கின்றனர். வேலன் யோசனைப்படி "பூதப்பிணங்கள்” வரிசையாக அடுக்கி வைக்கப் பெறுகின்றன. மறுநாள் நகரமக்கள் பிணங்களைக் கண்ணுறுகின்றனர். "பூதத்தின் இரகசியம்" தெளிவாகின்றது. வேழமன்னன் தன் படைத்தலைவனின் முடிவுக்குச் சிறிது வருந்தினாலும், அவனது வஞ்சகச் செயல் விளைவித்த முடிவே அது என்று மன அமைதியுறுகின்றான். பன்னாட்கள் கடந்தும் பேழை கிடைக்காமல் வேழ நாட்டரசன் தன் அமைச்சன் யோசனைப்படி ஏழெட்டு நாட்களுக்குள் பேழை கிட்டாதாயின் கதிர் நாட்டாட்சி மாழை என்னும் தன் மருமகனுக்கு உரிமையாக்கப் பெறும் என முரசறைவிக்கின்றான். வேலன், அன்னம், ஆத்தாள், கணக்காயன் முதலியோர் இதனைக் கேட்டுக் கவலையில் ஆழ்கின்றனர். இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அவை கழிந்த பிறகு மறுநாள் வேலன் கையில் பாண்டியன் பரிசு சேர்க்கப்பெறும் எனத் துறவியார் அறிவிக்கின்றார். நீலனின் வஞ்சகத்தை அறியாத நீலி இச்செய்தியை நீலனுக்கு அறிவிக்கின்றாள். உடனே நீலன் தன் வீடடைந்து பேழையோடு வருபவரை எதிர்த்துப் பேழையைப் பறிக்குமாறு ஆணையிடுகின்றான் தன் ஆட்களுக்கு. வேலன் பாண்டியன் பரிசுடன் குதிரைமேல் ஏறி வருகின்றான். கனக்காயன் மாணவர்களும், வேலப்பன் தோழர்களும் துணைக்காக அவனுடன் வருகின்றனர். நீலனது ஆட்கள் வேலனை எதிர்த்துப் பேழையைப் பறிக்க முயல்கின்றனர். இரு கூட்டத்தாரிடையே பலத்த மோதல் நேரிடுகின்றது. வேலன் தன் குதிரையுடன் இணைந்து பல