பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்கரு Y 37 அற்புதச் செயல்களைச் செய்கின்றான். கணக்காயனும் அவனது மாணாக்கர்களும் எதிரிகளைப் பிணக்காடாக்குகின்றனர். வேழமன்னனுக்கும் நிலைமை எட்டுகின்றது. எவ்விடத்தும் தீங்கில்லை. நகர் காப்பாளர் எங்கெங்கும் வாள் பிடித்து நின்று கொண்டிருக்கின்றனர். இரவு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆத்தாளும் அன்னமும் துயர்க் கடலுள் மூழ்கிக் குடிசையில் படுத்திருக்கின்றனர். அதிகாலையில் எழுந்து பார்க்கும்போது அன்னம் படுக்கையில் காணப்படவில்லை. சின்னக்குடிலில் குருதி வெள்ளம் கண்டு திடுக்கிடுகின்றாள். அப்பொழுது நீலனின் தூண்டுதலால் நீலி அங்கு ஓடிவருகின்றாள். வந்தவள் அன்னம் கொல்லப்பட்டு இடுகாட்டில் பட்டுப்போன புன்னை மரத்தடியில் புதைக்கப்பட்டதாகக் கூறிச் சொன்னபடி துடித்தழுது கீழே விழுந்து புரள்கின்றாள். ஆத்தாளும் துயர்தாங்க முடியாமல் கீழே விழுந்து புரண்டு கதறுகின்றாள். இந்நிலையில் வேலன் பேழையுடன் அங்கு வருகின்றான். நிலைமை அவனுக்குத் தெளிவாகின்றது. பல்வேறு விதமாக அன்பு மொழிகளை நினைவு கூர்ந்து பேசிக் கதறியழுகின்றான். "வெண்ணிலவை எட்டிவிட்டேன் என்றிருந்தேன், விண்ணினின்று வீழ்ந்தேனே ?” என்று கல் மனமும் உருகும் வண்ணம் தேம்பித் தேம்பி அழுகின்றான். இறுதியாகப் பிணத்தைத் தோண்டி எடுக்கின்றான். அருவருப்புடன் அப்பினத்தைத் தூக்கியெறிந்து விட்டு அனைத்தையும் துறந்த முனிவர்போல், பட்டினத்தடிகளும் நானும் வண்ணம், யாக்கை நிலையாமை பற்றியும், யாக்கையின் இழிநிலை பற்றியும் பேசுகின்றான்; பெண்ணுலகையும் பழித்துப் பேசுகின்றான். இவ்வாறு வேலன் பேசிக்கொண்டிருந்த நிலையில் அன்னம் பின்பக்கமாக நின்று பேசுகின்றாள். திரும்பி நோக்கிய வேலன் எல்லையற்ற வியப்பும் மகிழ்ச்சியும் அடைகின்றான்.பாண்டியன் பரிசை இருகைகளாலும் சேர்த்துக் கொண்டுதர, அன்னமும் தன் பூங்கையால் வாங்கி முகத்தில் ஒற்றிக் கொள்ளுகின்றாள். “முடிந்தது சூள் கடிமணம் தான் மிச்சம்” என்கின்றாள். வேலனும் அன்னமும்