பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அான் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு தத்தம் முன் நிலையைச் சொல்லிப் பரிமாறிக் கொள்ளுகின்றனர். இருவரும் நீலனுடைய சூழ்ச்சியையும் அன்னம் இறந்ததாக வதந்தி பரப்பியதையும் அறிந்து கொள்ளுகின்றனர். அனைவரும் ஒன்று சேர்கின்றனர். திருடர் தலைவன் வீரப்பன் தான் துறவிக் கோலத்தில் வந்து பேழையினைக் கிடைக்கச் செய்ததை அனைவரும் அறிகின்றனர்; வேலனும் அன்னமும் துறவியாருக்கு நன்றி செலுத்துகின்றனர். வேழநாட்டரசன் முரசறைவித்து நாட்டு மக்கள் அனைவரையும் கூட்டுகின்றான். வேலன்-அன்னம் திருமண விழாவும், நாட்டாட்சித் திருமுடிசூடும் விழாவும் ஒருங்கே நடைபெறுகின்றன.நல்லோர் பலரும் சான்றோர்களும் வாழ்த்துக் கூறி மகிழ்கின்றனர்.இங்கு முடியாட்சிநிறுவப்பெறுகின்றது. இவ்விடத்தில் ஏனைய நான்கு காவியங்களும் குடியாட்சி முடிவை எய்தியவை என்பதை நினைவுகூரலாம்.