பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு மற்றொரு மாந்தர் அன்னம். ஒருவருக்கொருவர் விஞ்சி செயற்படுவதால் ஒருவரை நீக்கி மற்றொருவரைத் தலைமை மாந்தராகக் கொள்ளமுடியாததாலும், ஒருவரை நீக்கிவிட்டால் காவியமே வளர்ச்சி பெறாததாலும், தொடக்கம்முதல் இறுதிவரை இருவரைக் கொண்டே காவிய வளர்ச்சி ஏற்படுவதாலும் இருவருமே தலைமைக் காவிய மாந்தர்களாக அமைகின்றனர். ஆகவே இருவரைப்பற்றியும் தலைமை மாந்தர்களாகவே ஆராய வேண்டியதாக அமைகின்றது. 1. அன்னம் “பாண்டியன் பரிசு” என்னும் காவியத்தில் காவியத் தலைவியாகப் படைத்துக் காட்டப்பெற்றிருப்பவள் அன்னம். இவள் கதிரை வேல் மன்னன் - கண்ணுக்கினியாள் இவர்களின் அருந்தவப் புதல்வி. இவனது தாய்மாமன் நரிக்கண்ணன். அவள் சோலையிலிருந்து அரண்மனைக்குள் அடிவைக்கும்போது கோட்டையின் வாயிற்புறத்தே வாள் அதிர்ப்பும், குதிரையின் குளம்படியின் ஒலியும், யானைக் கூட்டத்தின் மோதலும், தேர் அதிர்ப்பும் அவள் வள்ளைக் காதில் விழுகின்றன. மறத்தி உள்ளம் கொதிக்கின்றது. கிளிவுதடு கனல்சிந்தும்,துடிக்கும்; அஞ்சும்: வாட்போரை விரும்பும்அவள் தமிழ நெஞ்சம்! வகையறியா அவள்இளமை மறுத்து நிற்கும்: அவளது செவிலித்தாயாகப் பணியாற்றும் ஆத்தாள் இறக்கை முளைக்காமல் பறக்க நினைக்கும் அன்னத்தை அருகில் அமர்த்தி அனைத்துக் கொள்ளுகின்றாள். அரண்மனைக்குள் படை புகுந்தபோது ஆத்தாள் கிழவி அவளைக் கீழைவழி நிலவறையால் கிளியேந்தல்போலேந்தி வெளியிற் கொண்டுசென்று காக்கின்றாள். அன்னத்தின் நிலை: இவளுடைய தாய்மாமன் நரிக்கண்ணன் இவளுடைய அன்னையையும் தந்தையையும் போரில் வஞ்சகமாகக் கொன்றொழிக்கின்றான். தனது கையறு நிலையை அவளே, 1. இயல் 4:1- பக். 7