பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக்காவிய மாந்தர்கள் 41 யாருமில்லை யான்பெற்ற பேறு பெற்றோர், இன்றைக்கோ என்போலக் கெட்டாரில்லை: என்று சொல்லி நைகின்றாள். சுரந்தபால் இருந்தருந்திப் பரந்து லாவும் நெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும் நிறையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக் கிடந்துதவம் புரிகின்ற உலகில்’ தன் அம்மானே தன் அன்னைக்குக் கூற்றுவனாக முளைத்தானே என்று வருந்துகின்றாள். இவளது நிலை, வென்றெறி முரசின் வேந்தரெம் குன்றுங் கொண்டார் எந்தையும் இலமே! என்று தந்தையையும் நாட்டையும் இழந்த பாரிமகளிர் வருந்திக் கூறும் நிலையை நினைக்கச் செய்கின்றது. அன்னம் காவியத்தின் தொடக்கம்முதல் இறுதிவரை தலைகாட்டிக்கொண்டே இருக்கின்றாள். உடன் பிறந்தாளைக் கொன்ற நரிக்கண்ணனின் குறி இவளை நோக்கி நிற்கின்றது. அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்; ஆவிதிகள் பேழையினை அடைதல் வேண்டும்’ என்று அவன் வாக்காலேயே இதனை அறிகின்றோம். “அன்னம் தன்னை எதிர்ப்பட்டால் கொலை செய்ய இருப்போன் நரிக்கண்ணன்” என்று கணக்காயன் வாக்காலும் அன்னத்தைக் கவிந்து கொண்டிருக்கும் அபாயத்தை அறிய முடிகின்றது. ஆத்தாள் பாதுகாப்பில் புல்லூர்ச் சிறுகுடிசையில் அன்னம் இருக்கின்றாள். இயல் 22:5- பக், 43 இயல் - 22:2 - பக். 42 புறம் - 112 இயல் - 13:3. பக்.21 இயல்- 18:3- பக். 35