பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சுராவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு இதனை, புல்லூரில் சிறுகுடிசை தனில்இரண்டு புண்பட்ட நெஞ்சங்கள் ஒன்றையொன்று நல்லுரையில் தேற்றியிருந்தன.அவற்றில் தரைபட்ட ஆத்தாளின் நெஞ்சம் ஒன்று; வல்லுறு குறிவைத்த புறாப்போல் வாழும் மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ளம் ஒன்று” என்ற கவிஞனின் கூற்றால் அறியலாம். ஆத்தாள் கதிர்நாட்டில் அதுகாறும் நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நினைந்து உள்ளம் நைகின்றாள். அன்னத்தின் கண்ணினிக்கும் மகனைத் தேடி ஆவணியில் மணம் முடிக்கவும், தைப்பிறப்பில் கதிர் நாட்டின் மணிமுடியை அவளுக்காகவும் நினைப்பதையும் காண முடிகின்றது. பாண்டியன் பரிசு அடங்கிய பேழையின் இழப்பும் அவள் மனத்தை வருத்துவதையும் காண முடிகின்றது. அன்னத்தின் உண்மையான செவிலித்தாயை இங்கு காண்கின்றோம்; அன்னம் நல்ல பாதுகாப்பில் இருப்பதையும் காண முடிகின்றது. இவ்வாறு ஆத்தாளின் பாதுகாப்பில் அன்னம் இருக்கும்போது, அன்னம் அங்கு இருக்கக் கூடும் என்று எதிரிகள் குடிசையைச் சூழ்கின்றனர். இந்தச் சமயத்தில் கணக்காயன் யோசனைப்படி ஆத்தாளைக் காக்கும் நோக்கத்துடன் வந்த வேலன் பகைவர்களை எதிர்க்கின்றான்.இந்தநிலையில் அன்னத்தை ஆடவன்போல் உருவம் மாற்றித் தன்னையும் கன்னம் மறைக்கும் தாத்தாவாக மாற்றிக் கொண்டு இருவரும் கணக்காயன் வீடுநோக்கி நடக்கின்றனர். ஆலடியில் கணக்காயன் எதிரில் சென்று மாற்றுடைகளைக் களைந்து நடந்தவற்றைக் கூறுகின்றனர். வேழ மன்னனிடம் முறையீடு: ஆத்தாள், அன்னம், கணக்காயன் முதலியோர் மாற்றுடை அணிந்து வேழமன்னனிடம் செல்லுகின்றனர். அப்போது வேழமன்னன் தான் நரிக்கண்ணனுக்கு 7. இயல் - 20:1- பக். 38 8. இயல் . 20 : 2, 3, 4, 5, 6 - பக் (38-40) இயல் - 20 : 6 பக். 40