பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக் காவிய மாந்தர்கள் 43 முடிசூட்டியதற்கு மகிழ்ந்திருக்கும் நிலை. ஆனால் அவன் முடிசூட்டு விழாவில் பொதுமக்கள் முகத்தில் துன்பத்தைக் காண்பதற்குக் காரணம் ஏதோ என்று வினவும்போது முதியவன் வேடத்திலிருந்த ஆத்தாள்கிழவி நரிக்கண்ணன் சூழ்ச்சியால் படையெடுப்பு நிகழ்ந்ததையும், அவன் பின்னிருந்து கதிரை வேலனை ஈட்டியால் கொன்றதையும், தான் அன்னத்தைக் காத்ததையும், அன்னத்தையும் தன்னையும் கொல்வதற்கு நரிக்கண்ணன் சூழ்ச்சி செய்வதையும் தோலுரித்துக் காட்டி இருவரும் மாற்றுருவம் களைந்து தம் உண்மைநிலையைக் காட்டுகின்றனர். வேழமன்னன் பழி சுமந்ததற்கு வருந்துகின்றான்; இருவரையும் காப்பதாக உறுதி கூறுகின்றான். அன்னத்தைக் காக்க வழி: அன்னம் முதலியவர்களைக் காக்க அரசன் ஆராய்கின்றான்.அமைச்சன் நரிக்கண்ணனுக்கு முடிசூடியது தவறு என்பதை எடுத்துக்காட்டி அன்னத்தின் இசைவுடன் வேறு நாட்டு இளவரசைமணக்கச் செய்ய வேண்டும் என்றும் கதிர்நாட்டின் ஆட்சி கடுகளவும் தீங்கின்றி இருப்பதற்குப் பொது நாட்டம் உடைய அறிஞன் ஒருவன் பார்வையில் வைக்க வேண்டும் என்றும் யோசனை கூறுகின்றான். அரசன் அன்னத்தின் நாட்டத்தைக் கேட்க அவள் பேழையின் வரலாறு, அது இருக்கும் இடத்தையும் சுட்டி அடையாளம் கூறி அது சிறிதும் மாறாமல் கண்டறியக் கட்டளை இடுதல் வேண்டும் என வேண்டுகின்றாள். ஆளியெனும் ஒரு சில படைத்தலைவனை ஆயிரம் பேர் துணையுடன் அரண்மனையில் தேடச் செய்கின்றான். மேலும் அப்படைத்தலைவன் தேடுகையில் நரிக்கண்ணன் தலையீடு இருக்காமல் தடுப்பதற்குப் பொறுப்புள்ள ஆளை அனுப்ப வேண்டும் என்றும் எச்சரிக்கின்றான். ஆத்தாள் தாத்தாவைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டு தக்க படையுடன் செல்லுமாறு பணிக்கின்றான். கணக்காயனும் அவன் ஆட்களும் தேடலில் பங்கு கொள்கின்றனர்; முடிவு "பேழை கிடைக்கவில்லை”. வேலன்மேல் காதல்: “புனல் தரு புணர்ச்சி நடைபெறுவதற்கு முன்னர் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஆத்தாளின், குடிசையில்தான் முதன்முதலாக அறிமுகம் ஆகின்றனர். இருவரிடையே அன்புப் பேச்சுகள் நடைபெறுகின்றன. வேலன்மீது காதல் கொள்ளுகின்றாள் அன்னம். வேலனோ “நானோ மெத்த