பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு ஏழைமகன்” என்று ஒதுங்கப் பார்க்கிறான். அன்னம் தனக்கு "எட்டாப்பழம்” என்று கருதியிருக்கின்றான்; அவனிடம் சிறிதும் காதலுணர்வே இல்லை. அன்னமும், தாமுறு காமத் தன்மை தாங்களே உரைப்ப தென்பது ஆமெனல் ஆவ தன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா" என்ற தமிழ் மரபிற்கேற்ப புலப்படுத்திக் கொள்ளவில்லை. இது பின் தடைபெறும் நிகழ்ச்சியொன்றால் வெளிப்படுகின்றது. அன்னம் குதிரைமேல் இவர்ந்து பேழைக்குப் புலன் கேட்க அலைந்து ஒரு சோலையை வந்தடைகின்றாள். புன்னைவரை வேற்பளிக்கத் தென்றல் வந்து துகின்உடலில் மணந்தடவ இசைய ரங்கு தும்பியார் துவக்கினார் அமர்ந்தான் அன்னம்;" வேலனின் நினைவு வருகின்றது. அவள் அறிந்தோ அறியாமலோ தன்னை மறந்த நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் அகத்தில் “தனிமொழி” (Soiloquy) மிக்கொலிக்கின்றது. இதனை இலக்கியத்திறனாய்வாளர் "நாடகத் தனிமொழி” என்பர். வேலன் அறிமுகமானதும் அவனிடம் இவள் கண்டது: காதலில்லை அவன்கண்ணில் தேன்பற் றாத கவின்மலரின் இடமில்லை உயிர்வண்டு க்கே! களிக்கஒரு காதலில்லை அன்னோன் கண்ணில் கவின்மலரின் தேன்.இலைனன் உயிர்வண் டுக்கே: துடிக்குமோர் காதலில்லை அன்னோன் கண்ணில்: தூய்மலரில் தேனிலைனன் உயிர்வண் டுக்கே! பாங்குறஓர் காதலில்லை அன்னோன் கண்ணில்! பனிமலரில் தேனிலைஎன் உயிர்வண்டுக்கே! எழுகின்ற காதலில்லை அன்னோன் கண்ணில்! எழில்மலரின் தேனிலைஎன் உயிர்வண்டுக்கே!” 10. இயல் - 55:5- பக்.96 11. கம்ப. ஆரணி சூர்ப்பனகைப்படலம் - 45 12. இயல் - 62 : 1. பக்.116 13. இயல் - 62 : 3, 4, 5, 6, 7 - பக். 116-117