பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக் காவிய மாந்தர்கள் 45 ஆனால் நாளடைவில் அவன் காதலுணர்வு மலரத் தொடங்குகின்றது. அவளைத் தன் இதயத்தில் வைத்துக் கொள்ளுகின்றான். அன்னத்தின் காதலோ அவன்மீது வளர்ந்துகொண்டே போகின்றது. இவ்வளர்ச்சி பிறிதொரு நிகழ்ச்சியால் புலப்படுகின்றது. ‘ஏழுநாளில் பேழை அகப்படாவிட்டால் கதிர்நாட்டின் ஆட்சி மாழைக்கு வழங்கப்படும்" என்ற முரசொலி கேட்டவுடன் ஆத்தாளும் அன்னமும் நெஞ்சம் கலங்குகின்றனர். ஆத்தாளின் மடிமீது தலைசாய்த்துக் கொண்டு. வாயோரம் “உயிர்வாங்கும்” சிரிப்பு மின்னி வழிகின்ற வேலனின் திருமுகத்தில் மாயாத என்நெஞ்சம் சென்று சென்று மாய்வதனை இவ்வையம் அறிவ துண்டோ?" என்று சொல்லி வருந்துவதால் அவள் வேலன்மீது கொண்ட காதலைத் தெளிவிக்கின்றது. அன்னத்தின் மனவுறுதி நரிக்கண்ணனை நோக்கி வேழ மன்னன், "கதிரைவேல் மன்னனையும் அரசமாதேவியையும் கொன்று பழி தேடி இகழ்ச்சிமுடி பூண்டவனே!” என்று சீறுகின்றான். அன்னத்தின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, நாடிழந்தாள் நற்றந்தை, தாயிழந்தாள், நலமிழந்தாள், சலமிழந்தான்; கொடிபறந்த வீடிழந்தாள் புகழ்இழந்தாள், மணமிழந்த விளிமலரைப் போலிருந்தாள் அரச அன்னப் பேடிழந்த அனைத்துக்கும் நீஆளாகிப் பெற்றவற்றில் மீதியுள்ள உயிர்இழக்கத் தேடுகின்றாய்; ஆத்தாவைத் தீர்த்திட்டாயோ, திருடிவிட்டாய் பாண்டியனார் பரிசை ஏடா' என்று குற்றமும் சாட்டுகின்றான். நரிக்கண்ணன் இவைபற்றித் தனக்கு ஏதும் தெரியாதென்று நடித்து அரசன் காலில் வீழ்கின்றான். தன் மகன் பொன்னப்பனைத் 14. இயல் - 78:1- பக். 148 15. இயல் - 78:4- பக். 149 16. இயல் - 39:2- பக். 85