பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி_ கராவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு தன் தங்கையின் மகள் அன்னத்தையே மணம் புரிந்துகொண்டு கதிர் நாட்டை ஆளட்டும் என்று அரசனின் பரிவை நாடும் போக்கில் புதிய திட்டத்தை அவன்முன் வைக்கின்றான். வேழமன்னன், அன்னத்தின் கருத்தை வினவ, அவள் மனவுறுதியுடன், ஒருத்தன்னனை மனப்பதெனில் அன்னோன் என்றன் உயர்பேழை தனைத்தேடித் தருதல் வேண்டும்" என்று மறுமாற்றம் உரைக்கின்றாள். தன் நாட்டு உரிமையைப் பெறுவதே முதற்கடமை, முதலாய கடமை - என்று கருதுகின்றாள். அதன் பொருட்டுக் காதலையும் துச்சமென எண்ணித் தன் மனஉறுதியை வெளியிடுகின்றாள். பகைப்புலத்து மன்னன் புகழும் பெருமை உடையவளாகத் திகழ்கின்றாள் அன்னம். அவளுடைய நுண்ணறிவை மதிநலம் பெற்ற வேழ மன்னனே ஏற்றுக் கொள்ளுகின்றான். காற்றுக்கும் ஆடாமல், கனல்த னக்கும் கரியாமல் நன்முறையில் முப்பழத்தின் சாற்றுக்கு நிகரான மொழியாளே! நீ சாற்றுமொழி ஒவ்வொன்றும் நோக்கும் போது துற்றுக்கொன் றேஅன்றோ மானே! உன்றன் துண்ணறிவால் நீயுரைத்த வாறு நானும் ஏற்றுக்கொண்டேனதுபோல் ஆகட்டும்." என்று வேழமன்னன் இவளது பொறுமைப் பண்பு, மொழி இனிமை, மனஉறுதி ஆகியவற்றை மெச்சிப் பாராட்டுகின்றான். அவள் முடிவை அரசன் முரசறைவித்து நாட்டாருக்கும் உணர்த்துகின்றான். அன்னத்தின் நற்பண்புகள்: இவை அனைத்தும் அன்னத்திற்கும் அவள் அம்மான் நரிக்கண்ணனிற்கும் இடையே நடைபெற்ற உரையாடலாலும் தெளிவாகின்றன. மன்னன் முடிவைக் கேட்ட நரிக்கண்ணன், "பேழையினை தண்டுன்று கிழவன் ஒருவன் கொணர்ந்தால் அவனை மணக்க ஒருப்படுவாயோ!' என்று வினவ, அன்னம்,"பேழையைக் கொணர்வார் ஒரு கிழவரெனில், அவர் எனை 17. இயல். 40:2- பக். 67 18. இயல் - 412 பக். 68