பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக் காவிய மாந்தர்கள் 47 மணக்க ஒருப்படார்; அப்படி அவர் நினைப்பரேல் அவர் கிழவரல்லர், நெஞ்சத்தில் இளையவர், வயதில் மூத்தார்” என்று பதிலிறுக்கின்றாள். "பேழையைக் கொணர்வார் நோயால் இடருற்றவராக இருந்தால்நீ என் செய்வாய்?” என்று நரிக்கண்ணன் கேட்க, அதற்கு அன்னம், "தனியரசு போக்காத நோயை நானே, தவிர்க்கின்றபேறு பெற்றால் மகிழ்வேன்” என்கின்றாள். நரிக்கண்ணன் “பகையாளியாக அவன் இருக்க நேர்ந்தால், என் செய்வாய்?” என்று கிண்டலாகக் கேட்க, அதற்கு முதுகுக்குறை அன்னம், "பகையாளி உறவாளி ஆதல் உண்டு; மிகஉறவும் பகையாளி ஆதல் உண்டு - வியப்பில்லை இது” என்று ஒரு போடு போட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் எதிரம்பு கோக்கின்றாள். "பேழையைக் கொண்டு வருபவன் ஒரு குழந்தையாக இருப்பின் அவள் முடிவு நகைப்பிற்கு இடமாகும் அன்றோ ? என்று நரிக்கண்ணன் வினவ, அதற்கு அன்னம், “அவ்வரும்புநன் மனத்தை விரும்பும் எனில் அது நகைப்பேயாகும்” என்று பதிலிறுக்கின்றாள். "பேழையைக் கொணர்பவன் கீழ்ச்சாதியாளனாக இருந்தால், ஒருப்படுவாயோ?” என்று வினவ, "இவ்வுலகில் எல்லோரும் சமமே என்று மறுமாற்றம் உரைக்கின்றாள் அன்னம். உண்மையில் காதல் எது என்பது பற்றிப் பேச்சுப் போக்கு அமைகின்றது. அதற்கும் தக்க விடை தருகின்றாள் அன்னம்.இவ்வுரையாடலால் அன்னத்தின் அனைத்து நற்பண்புகளும் ஒளிவிட்டுக் காட்டுகின்றன. நீலியும் அன்னமும் ஒருநாள் அன்னமும் நீலியும் தனிமையாக உரையாடிக் கொண்டுள்ளனர்.அன்னம் தன் பெற்றோரின் மறைவைக் குறித்து வருந்துகின்றாள்."வருத்தத்தை ஒருவாறு போக்கிக் கொள்ள இருவரும் ஒர் ஒடத்தில் ஏறி செய்யாற்றில் உலவுகின்றனர். நீர்தேங்கும் செய்யாற்றின் ஒடம், துன்பம் நினைத்தேங்கும் அன்னத்தை நீலி யைப்பூத் தார்தாங்கும் தட்டம்போல் தன்பால் தாங்கத் தடக்கையில் துடுப்பசைய ஒட்டு வார்கள்" 19. இயல்- 51: 1, 2- பக். 39 20. இயல் - 52:2- பக், 90