பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காவின் பாண்டியன் பரிசு-இருமதிப்பீஇ அரும் பாட்டுப் பல இசைத்து ஒட்டும்போது ஒட்டம் வெள்ளன்னம் அசைந்திடாது செல்வதுபோல் செல்லுகின்றது ஒடம். எதிர்பாராது மேல்திசையில் ஏற்பட்ட மழையினால் ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படுகின்றது; பெருங்காற்றொன்று படகினைத் தாக்குகின்றது. ஆத்தாளோடிருந்த வேலன் இதனைக் கண்ணுறுகின்றான். தாயிடம் இசைவு பெற்று விரைந்தோடிப் பெருமரத்தில் கயிறு கட்டி நெடுமுனையை ஒரு கையால் பற்றி நீந்தி ஒடத்தைக் கரையில் சேர்த்து இருவரையும் காப்பாற்றுகின்றான். இஃது அகப் பொருள் துறையில் "புனல் தரு புணர்ச்சி”போல் அமைந்துள்ளது! அன்னமும் வேலனும் அன்புப் பேச்சுகள் பேசுகின்றனர். “பாண்டியன் பரிசுபற்றி முரசறைந்ததை அன்னம் வேலனுக்கு நினைவூட்டுகின்றாள். "பேழையினைக் கொண்டுவந்து தருவேன்; அன்றிப் பேருலகில் உயிர்வாழேன்" என்கின்றான் வேலன், ஆத்தாளின் இடக்கை இழப்பை நோக்கியும் வீரப்பன் நிலையை நினைந்தும் நைகின்றாள் அன்னம். நரிக்கண்ணனின் முடிவு:இரண்டாவது கட்டபூதத்தைக் கண்டு அஞ்சியோடி ஆனையூர்ப் பள்ளியில் இருந்த நரிக்கண்ணனைச் சந்தித்து நீலன் பூதத்தைக் கண்டு அஞ்சாதிருக்குமாறு அறிவுரை பகன்று எல்லோரும் பூதங்கள்போல் அரண்மனைக்குள் புகவேண்டும் என்று யோசனை கூறுகின்றான். நரிக்கண்ணன் அந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ளுகின்றான். அவனே அரண்மனைக்கும் சென்று அன்னம் முதலியோரிடம் நரிக்கண்ணனின் கூட்டம் பூதங்களாக வருவதைத் தெரிவிக்கின்றான். அன்னம் வேழமன்னனைச் சந்தித்து நரிக்கண்ணனின் திட்டத்தைக் கூறித் தம்மை பூதத் தொல்லைகளினின்றும் காக்குமாறு வேண்டுகின்றாள். வேழமன்னனும், 21. இயல்- 55 : 5 - பக்.96