பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக்காவிய மாந்தர்கள் 49 அஞ்சலைக்கும் பூதத்தை எதிர்த்துக் கொல்லார் ஆர்.எனினும் அவர்க்குநாம் காப்பளிப்போம்! வஞ்சிழிைல் அன்னமே இதுநம் ஆணை: மக்கட்கெ லாமிதனை எடுத்து ரைப்பாய்' என்று தான் உதவுவதாக வாக்குறுதி தருகின்றான். வேலன் தலைமையில் அனைவரும் பூதங்களை எதிர்க்கத் தயார் நிலையில் உள்ளனர். பூதக்கூட்டத்தை வேலனின் மறவர் கூட்டம் எதிர்க்கின்றது. மாம்பூ தலையில் அணிந்திருந்த நரிக்கண்ண பூதம் மாள்கிறது. "பனையி னின்னு காய்இற்று வீழ்ந்ததுபோல் நரிக்கண்ணன்தன் கருந்தலைவீழ்ந்தது' அன்னத்தின் வாளால் நரிக்கண்ணன் சாய்ந்து விடுகின்றான். தன் பெற்றோரைத் தீர்த்துக் கட்டித் தனக்கும் எமனாக இருந்த நரிக்கண்ணனைத் - தனது மாமனை - கண்ணன் தன் மாமனாகிய கம்சனைத் தீர்த்துக்கட்டியதுபோல் - தீர்த்துக் கட்டுகின்றாள்; வாகை குடுகின்றாள். பாவேந்தர் காவியத்தில்தான் பெண் காவிய மாந்தர்கள் வாளெடுத்துப் போர் செய்வதைக் காண்கின்றோம். 2. வேலன் “பாண்டியன் பரிசு” என்ற காவியத்தில் தலைமைக் காவிய மாந்தனாக ஒளிவிடுபவன் வேலன். இவன் திருடர் தலைவன் வீரப்பனின் செல்வமகன். ஆத்தாள் கிழவியின் அருமைப் புதல்வன். இளமை முதல் தாயின் அரவணைப்பேயன்றித் தந்தையைப் பற்றி அறியாதவன். சீனி என்னும் கணக்காயன்பால் உடனிருந்து வித்தைபல கற்றுத் தேர்ந்தவன். 'இவனை வளர்த்தானும் வசிட்டன் காண்” என்று இராமனைப் பற்றிக் கம்பன் கூறுவதுபோல் 'இவனை வளர்த்தானும் கணக்காயன் காண்” என்று கூறலாம். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்கானாய்த் திகழ்பவன். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். 22 দ্রন272য়ন্ত্র চন্দ্র গ্রঃ 23. இயல் - 74:1- பக். 140