பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அணின் பாண்டியன் uño-oo: மதிப்பீடு வீசவுணர்வு: சீனி என்னும் கணக்காயன் வேலன் முதலியோருக்கு நாட்டின் நிலையை விளக்குகின்றான். நரிக்கண்ணனின் கொடுமைநனிவிளக்கப்படுகின்றது. ஆத்தாளைக் காப்பாற்றுவதற்கு வேலனை உடனே ஏகுமாறு ஆற்றுப் படுத்துகின்றான். வேலனுக்குத் துணையாகச் செல்வதற்கு கணக்காயனின் மாணாக்கர்கள் இசைவு வேண்டுகின்றனர். இந்நிலையில் நரிக்கண்ணனுக்கு முடிசூட்டுவதாக அறிவிக்கப் பெறுகின்றது. இதனைச் செவிமடுத்த ஆத்தாள், நரிக்கண்ணனைத் துாற்றுகின்றாள். இதே நேரத்தில் அன்னமும் ஆத்தாள் கிழவியும் செம்மானுசர் குடிசையில்தான் இருப்பர் என்று நரிக்கண்ணனின் ஆட்கள் குடிசையைச் சூழ்கின்றனர். இந்நிலையில் வேலனும் குடிசையருகில் வந்து விடுகின்றான் குதிரைமீது வேலன் பகைவர்களைத் தாக்குகின்றான். வேலனின் குரல் ஆத்தாளுக்கும் கேட்கின்றது.இதுவே வேலனின் கன்னிப்போர். அவன் எதிரிகளுடன் போரிடுவதை, பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப் பாய்ந்தனன்பல் ஆட்டுக்குள் வேங்கை போல! கலங்கினர்வேழவர்' பத்துப் பேர்மாண் டார்கள்! கத்திசுழல் ஓசை மறவர் முழக்கம் குலைநடுங்க வைத்தன' என்று வருணிப்பார் கவிஞர். இதில் வேலனின் வீரவுணர்வு வெளிப்படுத்துகின்றது. இதனால் வேலன் வீரம் மிக்கவனாகப் படைக்கப் பெற்றுள்ளான் என்பது தெளிவாகின்றது. வேலன் புரியும் வீரச்செயலை இன்னொரு நிகழ்ச்சியிலும் காணலாம். வேலன் தன் அன்னையுடன் குடிசையில் இருக்கும்போது நீலியும் அன்னமும் ஏறியிருந்த படகு வெள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றது.படகோட்டும் மக்கள் படகைக்காப்பாற்றத் தம்மாலாகாது என்று கைவிடுகின்றனர். மங்கையர் அழுகுரல் கேட்கின்றது. கவிழ்ந்து போகும் நிலையிலுள்ள ஒடமும், குடிசையிலுள்ளோர் கண்ணுக்குப் 24. இயல்- 24; 2 பக். 46