பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக் காவிய மாந்தர்கள் 51 படுகின்றது. ஒடத்திலுள்ளாரைக் காப்பாற்றுவதற்கு இசைவு கேட்கின்றான் வேலன் தன் அன்னையை."நட”என்கின்றாள் அன்னை. வேலன் விரைந்தோடிப் பெருமரத்தில் கயிறு கட்டி நெடுங்கயிற்றின் ஒரு முனையைப்பற்றி நீந்திநிலைதவறும் ஒடத்தைவந்தடைகின்றான். சிறிது சிறிதாகக் கயிற்றை இழுத்து ஒடத்தைக் கரையில் சேர்த்து இரு மகளிரையும் காக்கின்றான். அந்த இருவரும் அன்னமும் நீலியும் என்பதாக அறிகின்றாள் ஆத்தாள். உடைமாற்றி குடிநீரும் காய்ச்சித் தந்து அவர்களின் களைப்பை நீக்குகின்றாள் அன்பு ஆத்தாள். கடமையுணர்வு: ஆத்தாளை வினவி தன்னைக் காப்பாற்றிய வேலனை இன்னார் என அறிந்து கொள்ளுகின்றாள் அன்னம், முன்னொரு சமயம் வேழநாட்டார் தன்னைச் சிறைபிடிக்க வந்தபோது தன்னைக் காத்தவனும் வேலனே என்பதனையும் அறிகின்றாள். இரண்டு தீரச் செயல்கட்கும் வேலனுக்கும் நன்றி செலுத்துகின்றாள். அப்போது வேலன் சொல்வான்: எனைன்ைற தத்தைக்கும் தாங்க்கும் மக்கள் இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு தலமேனும் கிடைக்கும் என்றால் செத்தொழியும் நாள்எனக்குத் திருநாள் ஆகும் பனையளவு நலமேனும் தன்ன லத்தைப் பார்ப்பானோர் மக்களிலே பதடியாவான்” இவ்வாறு வேலன் கூறுகின்றபோது அவனது கடமையுணர்வும் தொண்டுணர்வும் அவன் கொள்கையை மலர்த்திக் காட்டுகின்றன. “பாண்டியன் பரிசைக் கொடுப்பார்க்கு என்னைக் கொடுப்பதாக முரசறைவித்த செய்தியினை அறியீர் போலும்!” என்று நினைவூட்டிய அன்னம், "பழம்பெரிய பாண்டியனார் பேழைக் குன்ளே பகைவர்தமை ஒழித்திடும்ஒர் குறிப்பும் உண்டு: கொழுத்தபுகழ் உமக்குண்டு, கொண்டு வந்தால்: கொடைகொடுத்ததாகும் இந்நாட்டுக்கு." 25. இயல் - 55: 3- பக்.96 26. இயல் - 55: 4- பக்.96