பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அதாவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு என்றும் சொல்லுகின்றாள். அதற்கு வேலன், “நானோமெத்த ஏழைமகன்; தரிக்கண்ணர் ஆணை எங்கே யானெங்கே ஆயினும்னன் கடமை உண்டு’ என்று சொன்னாலும் கடமைக்கு முக்கியத்துவம் தருகின்றான். "பேழையினைக் கொண்டுவந்து தருவேன்; அன்றிப் பேருலகில் உயிர்வாழேன்” என்று கூறியவன் இறுதியில் அதனை நிறைவேற்றுவதையும் காண்கின்றோம். கணக்காயன் ஆணைப்படி தன் அன்னையின் ஆருயிரைக் காக்க ஓடுகின்றான்.அறியாமைப்பூதங்களுக்கு எதிராக வாளெடுத்துப் போர்புரிகின்றான். இவையெல்லாம் வேலனின் கடமையுணர்வை மெய்ப்பிக்கின்றன. காதல் உணர்வு: “நானோ மெத்த ஏழைமகன்' என்று சொல்லிக் காதலுணர்வுக்கே இடமில்லாதபடி சொன்ன வேலனின் காதல் "அரும்பு மலர் காய்கனிபோல்" பயன்தரப் போவதைக் காணத்தான் போகின்றோம். நாட்கள் செல்லச் செல்ல அவனுடைய காதல் உணர்வு சமுதாய ஏற்றத்தாழ்வினை மறக்கடித்து விடுகின்றது. கன்னலிலே சாறெடுத்துத் தமிழ்குழைத்துக் கனியிதழால் பரிமாறும் இனிய சொல்லாள் அன்னத்தின் மேல்லைத்தான் நெஞ்சை வேலன்' இங்கு வேலனது தனிமொழியால் அவன் அவள்மீது வைத்திருந்த காதலின் உறைப்பை அறிய முடிகின்றது. அவன் கண்ணிடையே அவள் மலர்க்காடாகின்றாள்.உள்ளக்கருத்திடையே மணமாகின்றாள். "மனம் நொந்து சாகத்தான் பிறந்துள்ளேனோ?” என்று பன்னிப்பன்னிப் பிதற்றுகின்றான்." பார்க்குமிடம் எல்லாம் அவள் தட்டுப்படுகின்றாள். 27. இயல் - 55:5- பக்.96 28. இயல்- 55:5- பக்.98 29. இயல்- 55: 5 - பக்.98 30. தா.பா. பராபரம்- 157 31. இயல் - 76:1-பக் 43 32. இயல்- 78:2,3,4,5, 5- பக். (143-145)