பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக்காவிய மாந்தர்கள் 53 ஆடப்போம் புனலிலெலாம் அவளே காற்றில் அசையப்போம்பொழிவிலெலாம் அவளே! கண்ணால் தேடப்போம் பொருளிலெலாம் அவளே! நேரில் தின்னப்போம் சுவையிலெலாம் அவனே வண்டு பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில் படுகதிரில் அவள்வடிவே காண்பேன் என்று வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன் மலர்ந்திட்ட காலையிலும் அவனைக் கண்டான்” என்று அவள் நிலையைக் காட்டுவார் கவிஞர். இப்பாடல் "நோக்குவ எல்லாம் அவையே போறல்” என்ற அகப்பொருள் துறைக்கு இலக்கியம்போல் அமைந்துள்ளது. அன்னம் இறந்து விட்டாள் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஒரு வெறுப்புணர்ச்சி பேழையுடன் வந்த வேலனை ஆட்கொள்ளுகின்றது. நூறு வேலும் நூறு அம்பும் சருக்கென்று பாய்ந்ததுபோல் உள்ளம் துடித்தழுகின்றான். அவனுடைய அழுகுரலின் உறைப்பைச் சொல்லி முடியாது. "இந்த வையம் முடியவில்லை எனங்கிங் கென்ன வேலை” என்பன போன்ற துன்ப வாசகங்கள் அவன் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. இவன் புலம்பும் பாடல்களைப் படிக்கும்போது அவலச் சுவையின் கொடுமுடியையே எட்டிவிடுகின்றோம். புதைத்ததாகச் சொல்லப்பெற்ற இடம் சென்று பினத்தைத் தோண்டி எடுக்கின்றான். "முழுதழுகி ஊன் கழன்ற முகத்தைக் கண்டு” “சீ” என்று பிணத்தை எறிகின்றான்; பலபடப் பழித்துப் பேசுகின்றான். பொருளில்லாப் பெண்மையைநான் பொருளாய் எண்ணிப் பொழுதெல்லாம் பழுதாக்கி விட்டேன்’ 33. இயல்- 76 : 8- பக். 145 34. இயல்- 85 : 4- பக். 182 35. இயல்- 87:7- பக். 167