பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கதாவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு என்று தேம்புகின்றான். பொதுவாக மக்கள் பெண்கள் என்னும் நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார் என்று பழித்து ஏசுகின்றான். பெண் இனத்தையே தூற்றுகின்றான். வையத்தையே வெறுத்து அருவருக்கின்றான். அன்னத்தின்மீது தான் கொண்ட காதலின் உறைப்பை அவன் "தனிமொழியில்” கண்ட நாம் இப்போது பெண்ணினத்தின்மீது கொண்ட அருவருப்பின் உறைப்பைக் காண்கின்றோம்! மனித மனத்தின் ஈரெல்லைகளையும் காணமுடிகின்றது. மனிதன் குறையுடையவன்; வேலனும் மனிதன் தான். எல்லாநற்குணங்களும் செம்மைக் குணங்களும் அடங்கிய ஒரு மனிதனைக் காண்டல் அரிது என்பதை வேலன் படைப்பினால் அறிய முடிகின்றது. பேழையைப் பெற்ற வேலன் வெற்றிக்களிப்பில் மிதந்து உலப்பிலா இன்பத்தில் மகிழ்ந்திருக்க வேண்டியவன். அவன் இப்பொழுது இராப் பொழுதில் இடுகாட்டில் நின்று அழும் நிலையில் உள்ளான். இந்த அழுகையின் ஒலத்தில் "நாடகத் தனிமொழி” பிறக்கின்றது. முற்றும் துறந்த பட்டினத்தடிகளும் உள்ளம் நானும்படியாக வேலன் யாக்கை லையாமையைப் பேசுகின்றான். 'வையத்தின் வாழ்வு இன்பமும் துன்பமும் நிறைந்தது என்ற பேருண்மையை வேலன் படைப்பினால் அறிந்துகொள்ள முடிகின்றது.