பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 5 எதிர்த்தலைவன் பல்வேறு வகை மக்களைக் கொண்டது இந்தப் பூவுலகம். இதில் நல்லவர்கள், தீயவர்கள், அறிஞர்கள், அறிவிலிகள், ஞானிகள் - அஞ்ஞானிகள், கலைஞர்கள் - கொலையாளிகள், வஞ்சகர்கள், கயவர்கள் என்று பலர் வாழ்கின்றனர்; அவரவர்கள் போக்கில் செயற்படுகின்றனர். இங்ங்னமே கவிஞர்களும் தாம் படைக்கும் காவியங்களில் இத்தகைய மக்களின் பிரதிநிதிகள்போல் சிலரைப் படைத்து காவியங்களை நடைபெறச் செய்கின்றனர். முன்னதைப் பேரண்டம் (Macrocosm) என்றால் பின்னதைச் சிற்றண்டம் (Microcosm) எனலாம். பாவேந்தர் படைத்தகாவியங்களில் இத்தகைய பல்வேறு வகை மாந்தர்களைக் கண்டு மகிழலாம். “பாண்டியன் பரிசு’ என்ற காவியத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை இணையற்ற பங்கு கொண்டு நடையாடித் திரிபவன் நரிக்கண்ணன். நடையுடை, பாவனை, தந்திரம் முதலியவற்றில் பாரதத்தில் வரும் சகுனியை நினைவுகூரும் வகையில் உள்ளான். காவிய மாந்தர்களில் காவியத் தலைவனுக்கு எதிராகச் செயற்பட்டு வருபவனாதலால் இவன் எதிர்த்தலைவனா கின்றான். இவன் வேழநாட்டு அரசனின் படைத்தலைவன். கதிர்நாட்டு மன்னனின் அரசமாதேவி கண்ணுக்கினியாளின் உடன் பிறந்தவன். இவன் கதிர்நாட்டைத் தந்திரமாகக் கைப்பற்றித் தான் அதனை ஆள வேண்டும் என்று செய்யும் சூழ்ச்சிதான் காவியத்தின் பெருவிசைபோல் இயங்கிக் கதையை நீளச் செய்கின்றது. காவியத்தின் தொடக்கத்திலேயே இவன் பிரவேசமும் நடைபெறுகின்றது. கதிர் நாட்டரசன் படைக்கும் வேழநாட்டரசப் பெரும் படைக்குமிடையே கடும்போர் நடைபெறுகின்றது. பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும் பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்: வேழவேந்தன் கோட்டைக்குள் நுழைந்துவிடுகின்றான். இருபெரும் வேந்தர்களும் வாட்போர் புரிகின்றனர். வெற்றிதோல்வி 1. இயல்- 5:2- பக். 8