பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கதாவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு யாருக்கென்று சொல்ல முடியாமல் “வாட்போருக்கிலக்கியத்தை' நல்குகின்றனர். இந்நிலையில் கருந்திரையுடனும் முக மூடியுடனும் தன்னை மறைத்துக்கொண்டு வந்த நரிக்கண்ணன் பின்னிருந்து கதிரைவேல் மன்னனை ஈட்டி எய்து கொல்லுகின்றான். உடன்பிறந்த நேரிழையாள் கண்ணுக்கினியாளையும் கொல்வதற்கும் மனத்தில் திட்டம் தீட்டுகின்றான். தன்னுடைய முகமூடியையும் கரிய உடையையும் அருகிலிருந்த ஆளை அணியச் செய்து தான் மட்டிலும் தன் உடன் பிறந்தாளை எதிர் நோக்கி அரண்மனைக்குள் நின்றிருக்கின்றான். தின்றிருந்த நரிக்கண்ணன் உடன்பி நந்த நேரிழையாள் வரும்வழியில் விழியை வைத்தான். “அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்; அவன்ஒழிந்தால், முக்காலும் தீரும்; பின்னும் அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும் அதன்பிறகன் றோஇந்த நாட்டின் ஆட்சி என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்” என்ற பாடற்பகுதியால் அவனது வஞ்சக உட்கிடக்கை புலனாகின்றது. கவிஞரும் மனம் பொறுக்காமல் “தினையேனும் மானம் இல்லான்!” என்று தம் சினத்தை வெளியிடுகின்றார். 3. ஒரு நாடகம்: பின்னிருந்து மன்னனை மாய்த்த வஞ்சக நரிக்கண்ணன் அரண்மனைக்குச் சென்று அரசமாதேவிக்குத்தன்னை நல்லவனாய்க்காட்டிக்கொள்ளமுயல்கின்றான்.குடிமக்கள் எல்லோரும் கூடும் பொதுமண்டபத்தில் கீழே வீழ்ந்து சரசரவெனப் புரண்டபடி, “எனக்கேன் வாழ்வு? சாக்காடே வாராயோ? உடன்பிறந்தாள் அரசியென வாழ்கின்றாள் எனஇருந்தேன்; அத்தியன் வேழத்தான் கதிர்நாடாளும் பெருமைகொள்ளன்மைத்துனனைக் கொலைபுரிந்து பிடுங்கினான் நாட்டையும்” என்று அழுது புலம்பிப் பலரது கவனத்தையும் ஈர்க்கின்றான். 2. இயல்-7:2. பக்.1 3. இயல் 9:4- பக். 18