பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் 57 இந்தத் தருணத்தில் அரசமாதேவி அங்கு வருகின்றாள். அவளை நோக்கி, "ஆருயிர்த் தங்கையே, என் மன்னன் என்னைப் புறக்கணித்தான். அது கிடக்கட்டும். செத்துப்போன மைத்துணனை இனிக் காண்பதுண்டோ? நீ திருநாட்டை இழந்து, துணை இழந்து கைத்துண்டிலில் சிக்கிய சிறுமீன்போல் கலங்குகின்ற காட்சியினை நான் காண நேர்ந்ததே வேழநாட்டான் என்னைப் படைத் தலைவனாகத்தான் வைத்திருந்தான். உண்மைதான்; என் மைத்துனனை இகழ்ந்துரைத்தானே! இதை எப்படி நான் பொறுப்பேன் ? கதிர்நாட்டைப் பிடிப்பதெனத் திட்டம் போட்டான்; கடிந்துரைத்தேன். மறுநொடியில் அமைச்சனுக்குப் புதுத்தலைமை தந்து படையெழுப்பிப் பொன்னான கதிர்நாட்டின்மீது விடுத்தான். எதிர்பாராத படையெடுப்பை நீங்கள் எப்படி அறிவீர்கள்! அதனைத் தெரிவிப்பதற்காகவே இவண்போந்தேன். நான் வருவதற்குள் வேழ நாட்டான் கதிர்நாட்டின் உரிமைதன்னைச் சிதைத்திட்டானே! மைத்துனன் உயிரைக் குடித்தானே! நீயோ என் உயிர் போன்றாய்! என்றோ ஒரு நாள் நான் இறப்பது மெய். வையகத்தில் துயர்தாங்க அட்டியில்லை; என்னை இகழ்ந்து சொல்லும் சொல்லை நான் எங்ங்ணம் பொறுப்பேன்? “முயல் போன்றான் நரிக்கண்ணன் என்றால் உந்தன், முத்தான தங்கையவள் வாழ்க்கைப்பட்ட வயவேந்தன் கதிர்நாட்டான், நரிக்கண் ணற்கு மைத்துனன்என்றுரைத்தபெருமையோ யிற்றே!” என்றெல்லாம் உரைக்கின்றான்; துடித்தழுகின்றான்; நீலிக்கண்ணிர் வடிக்கின்றான்; மேலும் பேச்சை எடுக்கையில் கரிய உடை போர்த்த ஆள்வருகின்றான். வந்தவன் “அடுத்து என்ன செய்வது?” என்று நரியைக் கேட்டு நிற்கையில் கண்ணுக்கினியாள். வாளைத் தூக்கிப் "புனையுந்தார் மன்னனைப் பின்புறத்தில் ஈட்டியைப் பாய்ச்சியவன் நீதானோ?” என்று அவனைச் சீறும்போது, 4. இயல்- 10:4- பக்.17