பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அணின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு “இல்லை எனக்கித்தக் கரி:உடை இவரே தந்தார் ஈயுமுன்னே மன்னவர்மேல் ஈட்டி எய்தார்” என்று உரைக்கின்றான். அதே நொடியில் நரிக்கண்ணன் தன் இடையில் மறைத்து வைத்திருந்த வாளால் உடன்பிறப்பை வெட்டித் தீர்த்து, “ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நான் உயிர்நடுங்க வைத்தவளை ஒழித்தேன்” என்று பெருமூச்சு விட்டு அன்னத்தைத் தேடி உள்ளே செல்லுகின்றான். இதற்கிடையில் கரிய உடை தரித்திருந்த காவலாள் சென்றுதான் கண்டவற்றை அரசனிடம் பதிவு செய்து விடுகின்றான். இந்நிலையில் நரிக்கண்ணன் அடுத்த திட்டமாக, அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும் ஆவிதிகள் பேழையினை அடைதல் வேண்டும்" என்று எண்ணி அரண்மனைக்குள் இட்டிருந்த ஒரு தவிசில் சென்று அமர்கின்றான். மேலும் ஒரு நடிப்பு: இந்நிலையில் வேழநாட்டரசன் அரண்மனைக்கு வருகின்றான். எழுந்து நின்று பொய் மூட்டைகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றான்."மன்னாதிமன்னா,நாளும் எனைக் காப்பாற்றி ஆளாக்கினாய் படைத்தலைவன் பொறுப்பை நல்கினாய். என்னைக் கோள், பொய், சூது இல்லாதவன் என உணர்ந்து அனைத்துத் தொண்டுகளையும் எனக்கே ஈந்தாய். நீளி என்ற பகை மன்னனைப் போரில் வென்றதற்குப் பரிசும் அளித்தாய்!” என்று அவனுக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். தொடர்ந்து, “இத்தகைய மிகப்பெரியோனாகியநின்னை என்தங்கை-கதிர்நாட்டுஅரசமாதேவி - இகழ்ந்துரைத்தாள். அவளை என் வாளுக்கிரையாக்கி நின் தொடுகழற்குக் காணிக்கையாக்கினேன். இது மட்டுமா? வஞ்சகத்தால்கதிரைவேலனை நீ கொன்றாய் என்று பழிசுமத்தினாள். இதனை எப்படி நான் பொறுப்பேன் ? அவளைச் சித்திரவதை § 5. இயல்- 11:1-பக் 18 6. இயல் - 13:3. பக் 2: