பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் 59 செய்யாமல்கெட்டேன்.மேலும் என்ன சொன்னாள் தெரியுமா? இதைச் சொல்ல நெஞ்சு பொறுக்க முடியாமல் தத்தளிக்கின்றது. "உன்னரசை இந்நொடியில் சூழ்ச்சியாலே கொன்றுவிடு; கதிர்நாட்டானையும் பழிவாங்கி விட்டு நானிலத்தை நீயே ஆள் என்று சொன்னாளே அந்தப்பாவி! காது பெற்ற துன்பத்தை என்ன சொல்வேன்!” என்று நாநலத்தால் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றான். நல்லாரின் பெருநிலையம் இந்த வையம்! நான்தீயா ளொடுபிறந்த தாலே தீயன் என்று தேனொழுகப் பேசுகின்றான். மேலும் தொடர்ந்து முத்தாய்ப்பாக, “ஒன்று மட்டும் சொல்வேன். துரயோயாகிய நின்னை அண்டி வாழ்ந்திருந்தேன். நின் புகழுக்கும் அறத்தினுக்கும் சிறிதும் பழி நேராமல் முழுதுண்மையாய் நடந்தேன்” என்று கூறி முடிக்கின்றான். இவ்வாறு தன் நேர்மையைக் கூறி நடித்தவன்தான் இறந்தபின் வானாட்டின்கண் பெறப்போகும் சிறப்பினையும் கற்பனையில் காண்பதைப்பற்றியும் பேசுகின்றான். நான்செத்த பின்அடையும் வானாட்டின்கண் நானூறு சிற்றுர்கொள் ஒருபே ரூரும் தேனுாறும் சோலைசூழ் அப்பே ரூரில் செப்பரிய அரண்மனையும் அரண்ம னைக்குள் பால்நேரில் காய்ச்சிஅதில் சீனி இட்டுப் பத்துவகை சிற்றுணவும் ஒத்த பெண்ணும் ஊனின்ப நுகர்கின்ற அறைஇ ருந்தால் ஒருத்தருக்கும் இல்லை.அது எனக்கே" என்று. உண்மையிலே இவன் வாய்ச்சொல் வீரன்தான்!. 8 நரிக்கண்ணன் பேசிய அனைத்தையும் நம்பி விடுகின்றான் வேழமன்னன். "அறம் பிழையா மறவன் நீ! அழுதிடுதல் வேண்டா” என்று அவனைத் தேற்றி, நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன் நாடென்றாய்! அதற்குள்ள சான்றும் உண்டோ?” 7. இயல் - 14:5- பக்.23 8. இயல் -14: 6- பக்.24 9. இயல்- 15:1- பக்.25