பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சைகளில் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீஇ என்று மன்னன் கேட்க, நரிக்கண்ணன் கூறுவான்: “அரசே, என் பாட்டனுக்குப் பாட்டனாகிய பறைக்கண்ணற்கு, குதிரை நிரை கொண்ட நெடுமுடியான் என்னும் கொடு நாட்டு மன்னன் அளித்தான் இந்நாட்டைப் பரிசாக பதினாயிரம் பேரை வென்றதாலே. அப்பொழுது வழங்கப்பட்ட அச்செப்புப் பட்டயத்தைக் கதிரைவேலனுக்கு முன்னோனாம் முத்தப்பன் மறைத்தான்; மூன்றாம் நாள் உறங்குகையில் கொலையும் செய்தான். தன் படைபலத்தால் குடிமக்களிடம் வாழ்ந்தான். என்னையும் விரட்டியடித்தான். உன் நாட்டுக்கு வந்தேன்! இந் நாட்டை நான் ஆளவேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. என் தந்தை இறக்கும்போது என் நாளில் வேழநாட்டின் மன்னவரின் அருள் பெற்று, கதிர்நாட்டு மன்னனாய் இருப்பாய். நமது மானத்தையும் காப்பாய்” என்றான். அனைத்தையும் நம்பிய வேழமன்னன், “அஞ்சேல்! அஞ்சேல்! இணங்குகின்றேன். நீ ஆள்க, இன்றைக்கே முடிசூட்டிக் கொள்க’ என்கின்றான். பிணங்குவித்தும் மைத்துனனை உடன்பிறப்பைப் பெருவஞ்சகத்தாலே சாகச் செய்தும் அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண்ணன்தான் அன்பிலாத தன்னுளத்தால் மகிழ்ந்து நின்றான்" இங்ங்ணம் மாயப்பொய் பல கூட்டிப் புனைந்துரைத்து அதனால் பெறும் நாட்டாட்சிக்கு மகிழ்கின்றான் நரிக்கண்ணன். நரிக்கண்ணனைப் பற்றி ஊர்மக்கள்: நரிக்கண்ணனுக்கு முடிசூட்டப் போவதை வேழமன்னன் ஆணைப்படி நகரில் ஒருவன் முரசறைந்து அறிவிக்கின்றான். அதனைச் செவிமடுத்த இருவர் தம்முள் பேசிக் குமுறுகின்றனர். அடிவைத்தான் கதிர்நாட்டில்! நெஞ்சில் வைத்தான் அழிவைத்தான் விழிவைத்தான் உரிமை வேரில்! குடிவைத்தான் ஒடிவைத்தான் நாட்டில் எங்கும் கொலை வைத்தான் குறைவைத்தான் எண்ணா னாகி வெடிவைத்தான் அறம்வளர்த்த இவ்விட்டுக்கும்!" 10. இயல்- 15:5- பக்.27 11. இயல் - 23:2. பக். 44