பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைச் செயலகம், சென்னை - 600 009. க. அன்பழகன் எம்.ஏ. கல்வி அமைச்சர் நாள்: 14.11.98 திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பல ஆண்டுகள் விளங்கித் தமிழுக்கு ஆக்கந்தரும் பல பணிகளை நிறைவேற்றியும், ஆந்திர மாநில மாணவர்கட்கு நற்றமிழ் இலக்கியத் தேர்ச்சி வழங்கியும் அரும்பணியாற்றியவர் தமிழ்ச்செம்மல் முனைவர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள். தமிழ் வளர்க்கும் குறிக்கோள் வெற்றிபெறதமிழ்நாட்டில் கடந்த முறைகலைஞர் முதல்வராக இருந்தபோது அவர்களை அணுகி, ஆண்டுதோறும் அப்பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் இருக்கைக்காக வழங்கும் நிதியை உயர்த்திடக் கேட்டுப் பெற்றவர். அவர் சங்கத்தமிழிலும்,திருக்குறளிலும்,வைணவ சமயநூல்களிலும், சமய தத்துவ ஆராய்ச்சியிலும், கம்ப இராமாயணத்திலும் மிகுந்த ஈடுபாடுடையவர். வைணவம் தொடர்புடைய நூல்களை ஆராய்ந்தவர். தமிழுக்கு ஆக்கம் செய்யும் ஆர்வத்துடன் அறிவியல் புலம் சார்ந்த பல நூல்களையும் இயற்றிய பெருமைக்குரியவர். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் எழுச்சிக்கு வழிகண்ட தேசியக்கவி பாரதியார் கவிதைகளையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளையும் போற்றும் நெஞ்சத்தினர். மரபுக் கவிதையேயன்றி புதுக்கவிதையின் சிறப்பினையும் காலத்தின் தேவை என ஒர்ந்து வரவேற்பவர்.அவரைப் பல ஆண்டுகளாகநான் அறிந்துள்ளேன். அவரது அயராத உழைப்பையும், இடைவிடாத தமிழ் ஆக்கத் தொண்டினையும் பாராட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளேன். அவர் சில ஆண்டுகளாகத் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்று நற்பணி ஆற்றி வருகிறார். - wi.