பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சுராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு வைத்தவர்கன் ஏமாறக் கவர்ந்து சென்றார் வண்கடலில் போட்டாரோ? நரிப்பேர் கொண்ட எத்தனவன் தானெடுத்துப் பேழை தன்னை எரித்தானோ என்று ரைப்பார்" என்று பேசுகின்றனர். தற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்கு தலமல்லால் தீமைவில்லை என்பார் சில்லோர்; பொற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்குப் பொல்லாங்கே ஆதலால் மறைத்தான் என்று சொற்பலவும் விரிப்பார்கள் சிலர்' இப்படியும் பேச்சு நடைபெறுகின்றது. இவற்றால் ஊர்மக்கள் மனத்தில் நரிக்கண்ணன் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றான் என்பதை உணர முடிகின்றது. முதியோனின் கூற்று நரிக்கண்ணன் மறைந்திருந்து கதிரை வேலனின் முதுகில் ஈட்டிபாய்ச்சிக் கொன்றதை முதியோன் ஒருவன் வாயில் வைத்துப் பேசுகின்றார் கவிஞர். இவர் வேறு யாரும் இல்லை, ஆத்தாள் கிழவியே இவ்வேடத்தில் பேசுகின்றாள்: இருவேந்தர் வாட்போரை நிகழ்த்தும் போதே ஈட்டியினைப் பின்வந்து கதிர்நாட் டான்மேல் நரிக்கண்ணன் செலுத்தினான் நானும் கண்டேன்! நகைத்ததுவான் நாணிற்று நல்ல றந்தான்' என்று நரிக்கண்ணனின் அடாத செயலைத் தோலுரித்துக் காட்டி விடுகின்றாள் அரசன் அவைக் களத்திலேயே. அரசன் ஆணைப்படி அரண்மனையில் பேழையைத் தேடச் சென்றபோதுநரிக்கண்ணன் ஏதாவது வஞ்சகம் செய்வான் என்பதை தீத்தாவும் கண்ணாலே நரிக்கண்னன்தான் சிறியபடைத் தலைவனையே அஞ்ச வைத்துக் 14. இயல்-58:1-பக் 110 15. இயல்- 58:2- பக். 10 16, இயல்- 28 : 4 - பக். 51