பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் 63 காத்தாளும் அரண்மனையில் பேழை தன்னைக் கைப்பற்றிக் கொள்வானே" என்று கூற அரசனும் அவளை உருவம் மாற்றிக்கொண்டு தக்க படையுடன் செல்லுமாறு பணிக்கின்றான். அன்னம் முதலியவர்களைக் காக்கும் வழியை ஆராயும்போது அரசன் அமைச்சனை நோக்கி, சின்னநடை நரிக்கண்ணன் இடம்வி டுத்தால் தீங்கிழைப்பான், நல்லஉளப் பாங்கொன்றில்லான் அன்னையினைக் கொலைசெய்தான்; தந்தை தன்னை அழித்திட்டான் அன்னத்தை ஒழிப்பதற்கும் முன்னின்று காத்தாளை ஆத்தா என்னும் முதியாளைத் தீர்த்திடவும் குறியா நின்றான்' என்று கூறுவான். அமைச்சனும் அரசனிடம், கொடியோனைக் கதிர்நாட்டை ஆள விட்டீர்! சீறுகின்ற பாம்புக்குத் தவளை யூரில் திருமுடியோ சூட்டுவது? பின்பு காண்பீர்? என்று கூறுவான். நரிக்கண்ணனின் இயல்பு இருவருக்கும் தெரிந்து விடுகின்றது. இருவரும் அன்னத்தைக் காக்க முடிவெடுக்கின்றனர். பாண்டியன் பரிசைத் தேடும்போது தென்மலைக்கு எவரும் வரக்கூடாது என்று எட்டி என்பானை மாறுவேடத்தில் அனுப்பி பூதமென ஊர்மக்கள் எண்ணுமாறு செய்தவன் நரிக்கண்ணன்; நல்லறிவற்ற கசடன். இதனை வீரப்பனின் தோழன் ஒருவன் “நரிக்கண்ணற்கோ, நல்லறிவோ அணுவுக்கும் மிகவும் மட்டம்!” என்கின்றான். நரிக்கண்ணன் பேழை தேடுவாரை எல்லாம் நோட்டம் பார்க்கின்றான். தெருத்தோறும் வாழ்வாரை ஒருங்கழைத்து "செப்பிடுவீர்! உண்மைதனை” என்கின்றான். அரண்மனைக்குள் தான் தந்த பேழைதனை ஒளித்தவரும் நீர்தாமோ ?” என்று 17. இயல் - 34 : 3 - பக்.58 18. இயல். 301- பக். 55 19. இயல் - 30:2- பக். 55 20. இயல் - 56 : 6 - பக். 100