பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 -Y சுராவின் பாண்டியன் பரிசு- ஒரு மதிப்பீடு பெரியோரையெல்லாம் அதட்டுவான். பெண்களை எரிமூளும் கண்ணாலே அஞ்சவைப்பான். இதனால் அன்பை அறியாதவன் என்பதும் காட்சிக்குக் கசடன் என்பதும் புலனாகின்றன. பூதப் பின்னலின் சூழ்ச்சியில் அவன் சிக்கிக் கொள்ளுகின்றான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்னும் பழமொழி இவன் வாழ்வில் உண்மையாகின்றது. இவன் சூழ்ச்சி வலை கதை முழுவதும் பரவி நின்று அனைத்தையும் சூழ்ந்தாலும் அரண்மனைக்குள் மாம்பூ அடையாளத்துடன் பூதமாக உலவும் நரிக்கண்ணன் அன்னத்தின் வாளுக்கு இரையாகின்றான். பனையினின்று காய்இற்று வீழ்வதுபோல் நரிக்கண் ணன்தன் கருத்தலைவீழ்ந்ததுவே.அன்னத்தில் வாளால்' தான் கதிர்நாட்டை ஆள வேண்டும் என்று கொண்டிருந்த பேராசை மண்ணோடு மண்ணாகின்றது. அன்னையையும் அத்தனையும் மாய்த்தவன் அவர்தம் அன்புச் செல்வியாலே மாளநேர்வது விதியின் ஒரு பெருவிளையாட்டு! 21. இயல் - 74 : 1. பக். 140