பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சுரானின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு கண்டம்” என்று பரத்தையின் தொடர்பால் கணவனைத் தொடுவதற்கும் விரும்பாத திருநீலகண்டநாயனாரின் அருந்ததி கற்பின் மிக்க துணைவியாரைப் போலவே, திருடுவதை விடவேண்டும் அன்றி என்னைத் தீண்டுவதை விட வேண்டும்’ என்று சொல்லிப் பிரிந்தவள். கணக்காயனின் உதவியால் அரண்மனையில் பணியாளாகப் பணியேற்றுத் தன் அருமருந்தன்ன மகன் வேலனைக் காப்பாற்றியவள். வேலனையும் கணக்காயரிடம் கல்வி பயிலச் செய்து அவனை ஆளாக்கியவள். அரண்மனையில் பணியாளாக இருப்பினும் நல்லூரை விட்டுப் புல்லூர் சென்ற ஆத்தாள் கிழவி தனிக் குடிசை ஒன்றை அமைத்துக்கொண்டு அதில் “தேனடையும் ஈயும்போல் மகனும் தானும்" "வறுமையிலும் செம்மை வாழ்வு” காண்கின்றாள். நல்லொழுக்கம்: வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டவள். தன் கணவனின் திருட்டுத் தொழிலை வெறுத்தவள். நற்பண்புகளையே விரும்புபவள். தன் கணவன் பிறர் எள்ளி நகையாடும் நிலையில் வாழக்கூடாது என்று எண்ணுபவள். தன்மகனை நல்வழியில் வளர்த்தவள். “வறியோர்க் கழகு வறுமையில் செம்மையன்றோ?” கணக்காயனின் தொடர்பு அவள் மகன் வேலன் நல்வழியில் வளர்ந்து, நற்பண்புகள் அமையப் பெற்ற நல்லவனாக, வல்லவனாக, வளர்வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. நாட்டுப்பற்று அரண்மனைக்குள் வேழநாட்டுப் படை புகுந்து கலக்குவதை அறிந்த ஆத்தாள் நிலவறையின் வழியாக அன்னத்தைக் கிளியை ஏந்திச் செல்வதைப்போல் ஏந்தி நிலவறை வழியாக வெளிச்சென்று காக்கின்றாள். அவளது நாட்டுப்பற்றும் கடமையுணர்வும் அரசிளங்குமரியைக் காப்பதற்கு உந்துவிசைகளாக அமைகின்றன. புல்லூர்க்குடிசையில் புண்பட்ட நெஞ்சங்கள் இரண்டும் - அன்னமும் ஆத்தாளும் - ஒருவரையொருவர் தேற்றிக் 2. திருத்தொண்டர் புராணம் - திருநீலகண் - 6 3. இயல்- 16:2- பக்.28