பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக் காவிய மாந்தர்கள் 87 கொண்டிருக்கையில் ஆத்தாளின் துயர மொழிகள் கல்நெஞ்சத்தையும் உருக்குமாறு கவிஞர் அமைத்துள்ளார். கடந்து போன துன்பத்திற்குக் கண்ணிர் வடிக்கையில், பழநாள்பாண் டியன்உன்றன் மூதாதைக்குப் பரிசளித்தான் இந்நாட்டை அதைக் குறிக்கும் முழுநீளப் பட்டயமும் உடைபூண் வாளும் மூடிய அப் பேழையும்போ யிற்றே அந்தோ! இழந்ததனால் பேழையினை, அழகு மிக்க இந்நாடு நின்உரிமை என்ற உண்மை ஒழிந்திடுமே: - என்று அவள் செவ்வாயில் உதிர்ந்த அமுத மொழிகள் அவளது நாட்டுப்பற்றை அரண் செய்கின்றன. புல்லூர்க் குடிசையில் ஆத்தாள் அன்னத்தை நோக்கி அழுத அழுகை கல் நெஞ்சத்தையும் உருக்கும்; நாட்டுப் பற்றையும் தெளிவுபடுத்தும், நரிக்கண்ணனுக்கு முடிசூட்டுதல் பற்றி முரசறைதல் நடைபெறுகின்றது. செவிமடுத்த ஆத்தாளுக்கு வயிற்றெரிச்சல்; ஆத்தாள் அவனைத் தூற்றுகின்றாள். அப்பொழுது எதிரிகள் குடிசையைச் சூழ்கின்றனர். கணக்காயன் அறிவுரைப்படி வேலன் குதிரைமேலிருந்துகொண்டு பகைவர்களை எதிர்க்கின்றான். ஆத்தாள் கிழவியின் மூளை கூர்மையாகச் செயற்படுகின்றது. அன்னத்தை ஆடவனாய் உருமாற்றியும், தன்னைக் “கன்னம் மறைக்கும் தாடியுடைய தாத்தா'வாக உருமாற்றிக் கொண்டும் கண்ணொத்த பையனோடு செல்வதைப்போல கணக்காயன் சீனி வாழும் தனி வீட்டை நோக்கி விரைந்து ஏகுகின்றனர். தன் ஒரே மகன் எதிரிகளுடன் தனியாகப் போரிடுவதைப்பற்றி அன்னம் கவலை தெரிவித்தபோது “ஊர்மீட்கச் சாகட்டும்!” என்று பகர்கின்றாள். நாட்டைக் காக்கும் பொருட்டுத் தன் ஒரே மகன் சாகட்டும் என்று கூறுகின்றாள். கண்மணியாகிய தன்மகனைக் கண்ணெடுத்தும் 4. இயல்- 20 பன்முறை படித்து அநுபவிக்கத்தக்கது. பக். 38-40 5. இயல் - 20 : 6 - பக். 40 6. இயல் - 25:1- பக். 47