பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அதாவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு பாராது தான் கண்ணிமைபோல் அன்னத்தைக் காத்துவரும் ஆத்தாளின் திடநெஞ்சம் நரிக்கண்ணனின் வஞ்சகத்திற்குச் சாட்டையடியாக அமைகின்றது. ஆத்தாளின் நெஞ்சுறுதியைக் கண்ட அன்னம் “பெற்றதாய் பிள்ளையுயிர் போவதையும் எண்ணவில்லை” என்று உலகம் அவளைப் பழிக்கும் என்றும், தன்னால்தான் இப்பழி நேர்ந்ததென்று தன்னையும் உலகம் தூற்றும் என்றும் கூறியவள், “மண்ணெடுத்துச் சுட்டிடுசெங் கல்லோ, அன்றி மலைக்கல்லோ உன்னெஞ்சம்” என்று சொல்லி வியக்கின்றாள். நரிக்கண்ணனுக்கு வேழமன்னன் முடி சூட்டியபோது பொதுமக்கள் முகத்தில் துன்பத்தைக் காண்கின்றான். “காரணம் யாதோ?” என்றெண்ணும்போது முதியவன் வேடத்திலிருந்த ஆத்தாள் சொல்லுகின்றாள்: நரிக்கண்ணன் வேழமன்னனுக்குக் கோள் மூட்டி பகையை விளைவித்ததையும், பெரும்படை கொண்டு வந்து போரில் மறவர் நெறி பிழைத்ததையும், நரிக்கண்ணன் கதிர்நாட்டான்மீது பின்னிருந்து ஈட்டியைப் பாய்ச்சியதையும், அரசமாதேவியை எதிர்பாராவகையில் வஞ்சத்தால் பெருங்கொலை செய்ததையும், அன்னத்தைத் தான் காத்ததையும், தன்னையும் அன்னத்தையும் கொல்ல ஒவ்வாத முறைகளைச் சூழ்வதையும் விரிவாக எடுத்துக்கூறி தன் உருவத்தையும் அன்னத்தின் உருவத்தையும் களைந்து காட்டி இருவர் உண்மை உருவங்களையும் வெளிப்படுத்துகின்றாள்' அரண்மனையில் அனைவரும் பாண்டியன் பரிசு அடங்கியிருந்த பேழையைத் தேடும்போது, தெருக்கதவின் அருகினிலும் போக வேண்டா படைமறைவர் யாவருமே வெளிச்செல்லாதீர் பகரும்இது வேழவரின் ஆணையாகும்: என்பதைக் கடைப்பிடிக்காமல் யாரோ ஒர் ஆள் (வீரப்பன்) 'அணித்தான தெருவாயில் நோக்கி மெல்ல அகலுவதை ஆத்தாள் 7. இயல் - 25:2-பக், 47 8. இயல் - 28:2.5 - பக். 50-51 9. இயல் - 35 ; 2 - பக். 59