பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக் காவிய மாந்தர்கள் 89 கவனித்து அவனது கணுக்காலை வெட்டுகின்றாள். அவனும் இவளுடைய இடக்கையை வெட்டி வீழ்த்துகின்றான். இருபது ஆண்டுகளாகப் பிரிந்திருந்த உடல்கள் அன்புறவில் பழமை மறந்து ஒட்டுகின்றன. வேதனை தாங்காமல் புலம்பும்போது ஆத்தாளின் வாய் "அத்தான்” என்கின்றது; வீரப்பனின் வாயும் "ஆத்தாள்” என்கின்றது. முன்பு ஒருகாலத்தில் இரண்டு கைகளாலும் ஆரத்தழுவிய அதே உடலில் இப்போது “ஒரு கையால் அணைக்கின்றாள்; உயர்வாளாகின்றாள்!” அன்பு முன்னிலும் பன்மடங்கு கொப்புளிக்கின்றது! "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” என்ற கம்பன் வாக்கு நம் மனத்தில் குமிழியிட்டு மகிழ்விக்கின்றது. அன்னமும் ஆத்தாளும் துயின்ற இடத்தில் அன்னம் காணப்பெறவில்லை. மாறாக செங்குருதி ஆத்தாளின் கண்ணில் படுகின்றது. "நீயோடி இறந்திட்டாய்!” என்று கூறித் துடித் தழுகின்றாள்". எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல் ஆங்குப்போந்த நீலி, "அன்னத்தைச் செங்குருதி சாயக் குத்தி அழகுடலை இடுகாட்டில் பட்டுப் போன புன்னையடி யில்புதைத்தார்; என்றன் ஆத்தா! போனதடி கதிர்நாட்டின் தேனுற் றன்று சொன்னபடி துடித்தழுது புரண்டாள் நீலி" இது நீலன் புனைந்த சூழ்ச்சி. என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன் எழிலுடைய நீலியிடம் உளவறிந்தான் இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான் இதற்கிடையில் நீஇறந்தாய் என்று பொய்யை என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான்" என்று வேலன் அன்னத்திடம் பேசிய பேச்சால் அறிய முடிகின்றது. 10. இயல் - 38: 2 - பக். 63 11. கம்பரா. பாலகா, மிதிலைக்.38 12, இயல்- 83:2- பக். 159 13. இயல்- 91:1- பக்.172