பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 % சதானின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு அன்னம் இறந்ததாகப் புனையப்பட்ட பொய்ச் செய்தி ஆத்தாளைச் செயலற்றவளாக்கி விடுகின்றது; உணர்வையும் இழந்தவள் போலாகின்றாள். முடிசூட்டு விழாவிற்கு ஆத்தாள் தள்ளாடி நடந்து வருவதைக் காண்கின்றோம்." இந்தக் காவியத்தில் ஆத்தாள் சிறந்ததோர் காவிய மாந்தர்; அற்புதமான படைப்பு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பொறுப்பு, நாட்டுப்பற்று, தூயபண்பு, செயற்கரிய செயலைச் செய்தல் போன்றவை ஒன்றுதிரண்டாற்போல் படைக்கப் பெற்று படிப்போர் உள்ளத்தில் நீங்காத நிலைத்த இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றாள். குஞ்சியைக் கோழிகாப்பது போல் அன்னத்தைக் குழந்தைப் பருவம்முதல் பாதுகாத்து அவள் அரசு கட்டில் ஏறும்வரை பங்கு பெற்ற ஆத்தாள் கிழவியை ஒன்றிய காவிய மாந்தராகக் கொள்வது எல்லாவகையிலும் பொருந்துவதாகின்றது. (2) வீரப்பன்: இவன் நல்லூரில் வாழ்ந்த திருடர் தலைவன். வேலனின் தந்தை ஆத்தாளின் அன்புக் கணவன். இவன் திருட்டுத் தொழில் நடத்தி வாழ்க்கை நடத்தினான் என்று நாம் கூறுவதற்கு காவியத்தில் அகச்சான்றுகள் இல்லை. "என்றன் தீயொழுக்கம் என் மனைவியாம் ஆத்தாள் வெறுத்தாள் "நீயோ திருடுவதைவிட வேண்டும்! அன்றி என்னைத் தீண்டுவதைவிட வேண்டும்” என்ற அவள் வாக்காலே சொல்லக் கேட்கின்றோம்”. தம் கணவரின் பரத்தைமை காரணமாகத் தன்னைத் தீண்டக்கூடாது "தீண்டு வீராயின் திருநீலகண்டம்" என்று இறைவன்மீது ஆணையிட்டுக் கூறிய திருநீலகண்ட நாயனாரின் மனைவி கூறிய நிகழ்ச்சியை நினைக்கச் செய்கின்றது. இருபது ஆண்டுகட்கு மேல் வீரப்பன் தன் மனைவி ஆத்தாள், மகன் வேலன் இவர்கள் தொடர்பின்றி திருடர் கூட்டத்துடன் வாழ்ந்து வருகின்றான். நரிக்கண்ணன் சூழ்ச்சியால் வேழநாட்டான் கதிர்நாட்டுமீது படையெடுத்து அத்னைக் கைப்பற்றிய பிறகுதான் வீரப்பனுக்குக் குடும்பத் தொடர்பு ஏற்படுகின்றது. அரண்மனைக்குள் வேழநாட்டுப் படைகள் புகுந்தபோது நரிக்கண்ணன் கையில் அவன் எதிர்பார்த்த 14. இயல்- 92 : 1. பக். 173 15. திருத்தொண்டர் புராணம்- திருநீலகண். 6