பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றியுள்ள பாண்டியன் பரிசு’ என்னும் குறுங்காவியம் குறித்து ஒரு மதிப்பீடு செய்து இந்த நூலை வெளியிட்டுள்ளார். பாண்டியன் பரிசு, பல பதிப்புகள் வெளி வந்து பலரது உள்ளத்திலும் பதிந்த நூல். பலரது பாராட்டும் பெற்ற நூல். பாண்டியன் பரிசு வரலாற்றுச் சாயல் கொண்டதொரு மன்னர் குடும்பக்கதை. மன்னன் மகளொருத்தி எளிய உழைப்பாளி குடும்பத்து இளைஞன் ஒருவனின் பண்பு நலனும் வீரமும் கண்டு, அவனது தந்தை திருட்டுத் தொழில் உடையவனாக இருந்தவன் என்பதையும் பொருட்படுத்தாது அவனையே மணாளனாக ஏற்று மணிமகுடத்துக்கும் அவனை உரியவனாகக் கொண்டனள். மன்னர் குடும்ப வழக்கத்தில் இருந்து விலகிய நிலையால் ஒரு புரட்சிக் கொள்கை இதனால் அரங்கேற்றப்படுகிறது. உண்மையில் கதைத் தலைவியாக விளங்கும் அன்னம், தன் தந்தையான மன்னன் முடியைக் கவர்ந்து கொள்ளத் திட்டமிட்ட தன் தாயின் உடன்பிறப்பான மாமனே தன் தந்தையை முதுகுப்புறத்தில் ஈட்டி எறிந்து வஞ்சகமாகக் கொன்றான். உண்மை உணர்ந்து சினம் கொண்ட தன் தாயையும் வெட்டிக் கொன்றான். தன்னையும் கொல்ல முனைந்தான் என்பதையும், அந்நிலையில் தன்னைத் தூக்கிச் சென்று காத்து வளர்த்தவள் தன் தாயிடம் பணிப்பெண்ணாக வேலை பார்த்த ஆத்தாள் என்பதையும், திருட்டுத் தொழிலைக் கைவிடாமையினால்தன் மனைவி ஆத்தாளின் கண்டிப்பால் அவளைவிட்டு விலக நேரிட்டவனே தன் காதலனின் தந்தை என்பதையும் அறிந்தவளாகிய நிலையில், மன்னர் குடும்பம் என்பதில் மதிப்போ, ஏழைப்பாட்டாளி குடும்பம் என்பதில் வெறுப்போஅன்னத்திற்கு ஏற்படவே முடியாதநிலை அமைந்தது கருத வேண்டியதாகும். அன்னம் - மன்னன் மகளாயினும் அவள் உரிமை, பாண்டியன் பரிசான பேழை கண்டுபிடிக்கப்படுவதைப் பொறுத்திருந்தது. அவள் வாழ்வோ மன்னன் மகளாக இல்லாமல், ஏழையான ஆத்தாளின் வளர்ப்பினாலேயே காக்கப்படுவதான நிலையில் அவள் மனம் அவர்களிடம் வேற்றுமை காணுதல் இயல்பன்று. - vii