பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் N 71 பாண்டியன் பரிசு அடங்கியுள்ள பேழை கிடைக்கின்றது. அதனை அப்படியே எடுத்து அடுத்திருந்த ஆள் ஒருவனிடம் தந்து “இதனைக் குப்பன் எனும் என்றன் தேரோட்டியிடம் சேர்” என்று கொடுத்தனுப்புகின்றான். இந்த ஆள்தான் மறவர் உடை அணிந்து கூட்டத்துடன் நின்றிருந்த வீரப்பன். இவ்வாறு தான் பெற்ற பேழையினைத் திருடர்களிடம் காட்டுகின்றான். பின்னர் அதனை ஆரும் அறியா ஒரிடத்தில் மறைத்து வைக்கும் எண்ணத்துடன் புல்லூர் செல்லுகின்றான். பேழையின் பாதுகாப்பு: புல்லூர்ச் சிறு குடிசையில் ஆத்தாளும் அன்னமும் ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டிருந்ததை" வெளியில் பேழையுடன் நின்றுகொண்டிருந்த வீரப்பன் கேட்டுக் களி கொள்ளுகின்றான். இப்போது அவன் அறிந்து கொண்டவை: () தன் முதுகின்மீது சுமந்திருக்கும் பேழை கதிர்நாட்டுக் கவின் அன்னத்தின் உடைமை என்பதை வெளிப்படுத்தும் தடயம், (2) தன் மனைவி ஆத்தாள் அன்னத்தைக் காப்பதற்கும் கேடுதனை நீக்குவதற்கும் முயலுகின்ற நிலைமை. இதனால் அப்பேழையைத் தக்க தருணத்தில்தான் அவர்களிடம் தருதல் வேண்டும் என்று முடிவு செய்து அதனை யாரும் அறியா இடத்தில் மறைத்து வைக்கின்றான். கணுக்கால் வெட்டுப்படல்: வேழமன்னனின் ஆணைப்படி படையுடன் அரண்மனையில் பேழை தேடப்படுகின்றது. கணக்காயன் முதலியவர்களும் தேடலில் பங்கு பெறுகின்றனர். இந்தக் குழுவில் வீரப்பனும் இருக்கின்றான். எவரும் வெளிச்செல்லக் கூடாது என்பது அரசன் கட்டளை. வீரப்பன் 'அணித்தான தெருவாயில் நோக்கி அகலுவதை ஆத்தாள் கவனிக்கின்றாள். அவனைத் துரத்துகின்றாள் வாளை ஒச்சி.யானைக்கூடத்தருகில் இருள்சூழ்ந்த பொதுமன்றத்தருகில் ஆத்தாள் வீரப்பனின் கணுக்காலை வெட்டுகின்றாள். வீரப்பன் ஆத்தாளின் இடக்கையைத் துணிக்கின்றான் - இருவரும் ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளாமல்: “இரு முதியோர் அருகருகு துடித்து வீழ்ந்தார்; செந்நீரில் புரளுகின்ற இரண்டுடம்பும் 16. இயல் - 20:1- பக். 38