பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும்” என்கின்றார் கவிஞர் கிழவி "அத்தான்' என்கின்றாள்; கிழவன்"ஆத்தாள்”என்கின்றான்.இருவரும் ஒருவரையொருவர்நலம்விசாரித்துக்கொள்ளுகின்றனர்.இங்ங்ணம்நலம் உசாவும் பேச்சால் ஒருவர் மற்றொருவர்மீது வைத்திருந்த பாசம், நேசம் முதலியவற்றைத் தெளிவாக அறிய முடிகின்றது. கரிய உடையணிந்திருந்த ஆள்மூலம் வேழமன்னன் நரிக்கண்ணனின் தீச்செயலைக் கேட்டு உள்ளம் உருகினபோது, அருகிலிருந்த நரைத்த தாடி, இளைத்த உடல், களைத்த விழிக்கிழவன்’ (வீரப்பன்)" "வேந்தே, கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்? காயின்றேல் கனியருமை யாரே காண்பார்? நரிக்கண்னர் இலையெனில்நும் அருமை தன்னை நானிலத்தான் அறிந்திடுமோ நவில்க'; என்று திறனாய்வு செய்வதைக் காணும்போது நம் உள்ளமும் பூரித்தெழுகின்றது. அன்னம் ஒரு சோலையில் தங்கியிருந்தபொழுது, நல்விழியைத் துயில்வந்து கெளவ, ஆங்கே கைம்மலரில் தலைசாய்த்துப் புன்சிரிப்பைக் கனிஇதழில் புதைத்துடலை ஒருக்க னித்துக் கைவல்லான் வைத்தயாழ் போற்கிடந்தாள்” அப்பொழுது துறவி வேடத்துடன் வருகின்றான். வந்தவன் அன்னத்திடம், “சிறந்த ஒர் பாண்டியன் பரிசு, கைக்கு வரும், சிறிதும் வருந்தாதே’ என்று கூறி, “அருங்கிளியே உனக்கான ஆட வன்பால் அதையுரைப்பேன் இங்கவனை அனுப்பாய்” என்றான்." 17. இயல் - 37 : , 2. பக், 61 18. இயல் - 12:2. பக். 19 19. இயல் - 53 : 1. பக்.19 20. இயல் - 64:2 பக். 120