பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக் காவிய மாந்தர்கள் 73 அன்னமும் செம்மானூர் சென்று வேலனிடம் செய்தியை உரைக்கின்றாள். வேலனும் துறவியால் அதனைப் பெறுகின்றான்' இத்துடன் வீரப்பனின் பொறுப்பு தீர்கின்றது; அவனும் அன்னத்தின் பால் ஆட்சி வருவதற்குப் பெருங்கடமை புரிகின்றான். காவிய மாந்தனின் இன்றியமையாமை: சந்தர்ப்பத்தால் கிடைத்த பாண்டியன் பரிசு அடங்கிய பேழையைக் கண்ணெனக் காத்து தக்க தருணத்தில் உரியவரிடம் ஒப்படைப்பதுடன் வீரப்பனின் கடமை முடிந்து விடுகின்றது. கவிஞர் இம்மாந்தன் வாயிலாகத் தம் கொள்கையினைத் தூவுகின்றார். வீரப்பனும் அவனது தோழர்களும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைக் கவிஞர் பேசுவதற்குக் கருவிகளாக அமைகின்றனர். மூடப்பழக்கத்திலும் மடமையிலும் ஆழ்ந்துகிடக்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைக்க எண்ணும் கவிஞர் அமைதியான முறையில் சமூகம் மாறாது என்று கருதுகின்றார். சமூகம் இதற்குப் பொருந்திவராது என்று நம்பி தீவிரவாதத்தை ஆதரிக்கின்றார். இதனை, மக்களைவீழ்த் துய்கொடுமை தீரா இந்த ஆட்சிக்குப் புறம்பாய்நான் இருக்கும் போதே அற்றது.கால்! அரசு பெற்றால் உயிர்போம்” என்ற வீரப்பனது கூற்றால் அறிய முடிகின்றது. சாதாரணமாக அறத்திற்குப் போராடி அமைதியான முறையில் வெற்றி காண்பதென்பதற்கு உலக வரலாற்றில் சான்றுகள் இல்லை. ஆனால், 1942-இல் நமது நாட்டில் காந்தி வழியில் நடைபெற்ற புரட்சியைக் கூறி மகிழலாம். அக்காலத்தில் “செய்; அல்லது செத்து மடி” (Do or Die) என்ற "போர்க்குரல்" (Slogan) எங்கும் ஒலித்தது. இன்றும் நம் மனக்காதில் கேட்கத்தான் செய்கின்றது. அதன் விளைவாகநீதிமன்றத்திற்குத் தீயிடல்,இருப்பூர்திகளைக் கவிழ்த்தல், பேருந்துகட்குத் தீயிடல் போன்ற செயல்களை நாம் மறத்தற்கில்லை. 21. இயல் - 64:3-பக். 121 22. இயல் - 56:2- பக்.98