பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சுராவின் பாண்டியன் பரிசு ஒருமதிப்பீடு கையாலாகாத கவைக்குதவாத இம்முறை செயலற்றுப் போனபிறகு இறைவனின் அவதாரக் கொள்கை பிறக்கின்றது. "அறம் தாழ்ந்து மறம் தலை தூக்கி நிற்கும்போது, நல்லோரைக் காப்பதற்கும் அல்லோரை அழிப்பதற்கும் நான் யுகந்தோறும் அவதரிக்கின்றேன்” என்பது கீதை வாக்கியம். புத்தர், மகாவீரர், நபிகள் நாயகம், இயேசுநாதர் பிறந்து தம் கொள்கைகளைப் போதித்தும், அக்கொள்கைகளை அவர்தம் சீடர்கள் விடாமல் போதித்தும் சமூகம் திருந்தவில்லை. மாறாக மதவெறி, மொழிவெறி, சாதிவெறி போன்றவைதாம் நேர்முறையிலும் நேரல் முறையிலும் செயற்பட்டு வருவதை நாம் நேரில் காண்கின்றோம். நம்நாட்டில் நீதிநூல் களஞ்சியம் தோன்றியதுபோல் எந்த நாட்டிலும் தோன்றவில்லை. அவற்றாலும் மக்கள் திருந்தவில்லை. அவை பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்றவைக்குப் பொருளாக அமைவதற்குத்தான் பயன்படுகின்றன. உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் பல்வேறு துறைத் தலைவர்கள் இருக்கும்வரை, "ஒதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாம் அடங்காப் பேதைகள்” இருக்கும்வரை எந்த மாற்றத்தையும் காணமுடியாது. எண்ணிக்கையில் குறைவான சில அரசியல் தந்திரவாதிகள், அரசியலைத் தம் பிழைப்புத் தொழிலாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றி அட்டகாசம் செய்து கொண்டிருக்கும்வரை சமூகத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியாது. உடல்நல விதிகளையும் நல்ல உணவுமுறைகளையும் பின்பற்றாமல் நாக்குக்கு அடிமைப்பட்டு, கண்டவற்றைத் தின்று வயிற்றை நிரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களிடம் சர்க்கரை நோய் தோன்றியும், குருதி அமுக்கம் தோன்றியும் அழிவுக்குக் காரணமாக அமைவதைப்போல், நெறிபிறழ்ந்த ஆட்சியும், தலைவர்கள் ஏமாற்றும் வித்தைகளைக் கையாண்டு பிழைக்கும் வழிகளும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்அரசியல் தலைவர்களைக் கொல்லும் போக்குகள் இவை பஞ்சாப், ஜம்மு காஷ்மீரம், அஸ்ஸாம், ஆந்திரம் போன்ற பகுதிகளில் தோன்றிக் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதைக் காணத்தான் செய்கின்றோம். ஆட்சிப்