பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் Y 75 பொறுப்பிலுள்ளவர்கள் இவற்றை அடக்குவதுடன், இவற்றிற்குரிய காரணத்தையும் அழித்தொழிக்கப் பாடுபடல் வேண்டும். இன்றைய அரசியல் தலைவர்களின் மெத்தனமான போக்கும், வாய்ச் சவடால்களில் கூறும் தந்திர சமாதானமும் பயங்கரமான எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும் என்ற அச்சமும் மக்களிடையே விளைவித்து வருகின்றது. அறத்திற்குப் போராடி வெற்றி காணமுடியாதவர்கள் சமுதாய மாற்றத்தை வன்முறை மூலம் நிறைவேற்ற முயல்கின்றனர் என்பதை இக்கால நிகழ்ச்சிகள் குறிப்பாக அமைகின்றன. ஆயினும் வீரப்பன் இவற்றிற்கும் விதிவிலக்காக அமைகின்றான்.சாதி, சமயம், சமத்துவம், விடுதலை, பகுத்தறிவு, பொதுவுடைமைப்புரட்சிமாற்றம் காண விரும்பும் ஒரு புரட்சியாளன் கூற்றாகவே அமைகின்றது வீரப்பன் தன் தோழனிடம் பேசும் பேச்சு. எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்: கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்கும் துக்குமரம் அங்கு உண்டாம் இல்லாரும் அங்கில்லை; பிறன்த லத்தை எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே! நல்லாரே எல்லாரும், அவ்வை வத்தில் நமக்கென்ன கிழியட்டும் பழம்பஞ் சாங்கம்’ வீரப்பன் என்ற காவிய மாந்தனின் வாயிலாக இத்தகைய கருத்துகளைப் பரப்பியிருப்பது எருமை மாட்டின்மீது மழைபெய்தது மாதிரி எதற்கும் அசையாத இன்றைய சமூகத்திற்கு - அதில் அமைந்திருக்கும் மெத்தனமாக இருக்கும் அரசியலாரின் போக்கிற்கு - ஒரு சாட்டையடி கொடுப்பதுபோன்றது. வீரப்பனின் தோழர்களின் பேச்சும் இப்பாணியிலேயே அமைந்துள்ளது. வீரப்பனைத் தன்னுடைய ஆட்களில் ஒருவனாகக் கருதி பாண்டியன் பரிசு அடங்கியுள்ள பேழையை அவனிடம் தருகின்றான் நரி. அதனை வாங்கி வந்த வீரப்பன் அதனைத் தன் திருடர் தோழர்களிடம் காட்டுகின்றான். 23. இயல் - 56 : 4- பக்.99